என் கதையும் சாவித்ரி கதை போல் சோகமாக முடிந்திருக்க வாய்ப்பிருந்தது- சமந்தா!

‘முன்னாள் காதலன் தான் அப்படியே தவிர, இப்போது எனது கணவரான நாக சைதன்யா போன்ற ஒரு நல்ல மனிதரைக் காண்பது அரிது. முதல் காதலை இழந்து விட்ட வருத்தத்தில் இருந்த நான் சைதன்யாவைச் சந்தித்தது தான் என் வாழ்வின்
என் கதையும் சாவித்ரி கதை போல் சோகமாக முடிந்திருக்க வாய்ப்பிருந்தது- சமந்தா!

நடிகையர் திலகம் சாவித்ரி வாழ்க்கைச் சித்திரத்தில் பத்திரிகையாளராக நடித்திருந்தார் சமந்தா. படத்தில் சாவித்ரி கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்த கீர்த்தி சுரேஷின் நடிப்புத்திறன் பற்றி திரைப்பிரபலங்கள், மூத்த நடிகர், நடிகைகள், சினிமா ரசிகர்கள் எனப் பலரும் பாராட்டுப் பத்திரங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் அத்திரைப்படத்தில் நடித்தவரும், கீர்த்தியின் சக நடிகையுமான சமந்தா நடிகையர் திலகம் தொடர்பாக நடைபெற்ற எந்த பாராட்டு விழாக்களிலும் பெரிதாகக் கலந்து கொள்ளாமலே தவிர்த்து வந்தார். 

சமீபத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனிப்பட்ட முறையில் நடிகையர் திலகம் படக்குழுவினரை தமது அலுவலகத்துக்கு வரவழைத்து வரிவிலக்கும், சான்றிதழும் அளித்துக் கெளரவித்த போதும் அந்த விழாவில் சமந்தா மிஸ்ஸிங். காரணமாக அவர் தரப்பில் குறிப்பிடப்பட்டது, நடிகையர் திலகம் திரைப்படத்திற்கான முழு பாராட்டும், புகழும் கீர்த்திக்கே கிடைக்க வேண்டும் என்ற பெருந்தன்மையான மனப்பான்மையே எனக்கூறப்பட்டது. தற்போது நடிகையர் திலகம் திரைப்படத்தோடு தொடர்பு படுத்தி தனது சொந்த வாழ்க்கை அனுபவம் சார்ந்து சமந்தா பகிர்ந்து கொண்டுள்ள ஒரு செய்தி மீண்டும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

நடிகர் நாக சைதன்யாவுடன் காதலில் விழும் முன் சமந்தாவுக்கு தனது திரையுலக வாழ்வில் முதல் காதல் அனுபவம் ஒன்றிருந்தது. கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் நீடித்த அந்தக் காதலில் தான் மிக உண்மையாக இருந்த போதும் தனது முன்னாள் காதலரான அந்த நபர் தன்னிடம் உண்மையாக நடந்து கொள்ளவில்லை. நடிகையர் திலகம் திரைப்படத்தின் ஜெமினி கணேசன் கேரக்டர் போல அவரது கேரக்டர் பல பெண்களுடன் பழகும் தன்மை கொண்டதாக இருந்தது. அதைத் தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாத காரணத்தால் தான் அந்த உறவிலிருந்து வெளி வந்து விட்டதாக தெரிவித்திருக்கும் சமந்தா, ‘நல்ல வேளை துணிந்து முடிவெடுத்து அந்த உறவிலிருந்து வெளியேறினேன். இல்லா விட்டால் என் கதையும் நடிகையர் திலகம் சாவித்ரி கதை போல துன்பியல் நாடகமாக முடிந்திருக்கும். ஏனெனில், அந்த உறவு கொடுத்த மனச்சுமை காரணமாக என்னால் நிஜ வாழ்விலும் சரி, திரை வாழ்விலும் சரி முழு மனதோடு இயங்கியிருக்க முடியாமல் போயிருக்கும். கடைசியில் என் சொந்த வாழ்க்கையோடு சேர்த்து திரை வாழ்வில் எனது முன்னேற்றம் இரண்டையும் கெடுத்துக் கொண்டு காணாமல் போயிருப்பேன்.’ என்று கூறியிருக்கிறார்.

‘முன்னாள் காதலன் தான் அப்படியே தவிர, இப்போது எனது கணவரான நாக சைதன்யா போன்ற ஒரு நல்ல மனிதரைக் காண்பது அரிது. முதல் காதலை இழந்து விட்ட வருத்தத்தில் இருந்த நான் சைதன்யாவைச் சந்தித்தது தான் என் வாழ்வின் மிகச்சிறந்த தருணமெனக் கருதுகிறேன்.’ என்று மனம் திறந்து தனது சொந்த வாழ்க்கை அனுபவத்தை பொதுவெளியில் பகிர்ந்திருக்கிறார் சமந்தா. பெண்கள் தங்களது கேரியருக்கும், மனப்பான்மைக்கும் பொருந்தி  வரக்கூடிய மணமகன்களைத் தேர்ந்தெடுத்தால் மட்டுமே சொந்த வாழ்க்கையிலும் சரி, அலுவலிலும் சரி வெற்றி பெற முடியும். என இதன்மூலமாக சமந்தா அறிவுறுத்தியிருக்கிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com