‘எங்க வீட்டு மாப்பிள்ளை ஷோ ஒரு வித்யாச முயற்சி’! நான் அதை சரியாகக் கையாண்டிருப்பதாக நம்புகிறேன்: ஆர்யா!

எனக்கு என் திருமணத்தை விட அந்தப் பெண்களுடனான நட்பிலும், அவர்கள் என் மீது வைத்த நம்பிக்கையிலும் எந்த விரிசலும் வந்து விடக்கூடாது எனும் உணர்வு அதிகமிருந்தது.
‘எங்க வீட்டு மாப்பிள்ளை ஷோ ஒரு வித்யாச முயற்சி’! நான் அதை சரியாகக் கையாண்டிருப்பதாக நம்புகிறேன்: ஆர்யா!

சமீபத்தில் ஆர்யா, சுதிர் ஸ்ரீனிவாசனுக்கு அளித்த நேர்காணலொன்று யூடியூபில் காணக் கிடைத்தது. அதில் ஆர்யா, கலர்ஸ் தொலைக்காட்சியில், தான் பங்கேற்ற ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ ரியாலிட்டி ஷோ குறித்து சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டிருந்தார்.

டி.வி ஒரு மிகப்பெரிய ஊடகம். தென்னிந்தியாவில் இன்னும் அதன் முழு வீரியத்தை நாம் உணர்ந்து கொள்ளவில்லை. நடிகர்கள் டி.வி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றால், உடனே அவர்களுக்கு திரைப்பட வாய்ப்புகள் குறைந்து விட்டது அதனால் தான் டி.வி பக்கம் தலை காட்டுகிறார்கள் என்று எளிதாகச் சொல்லிவிடுகிறார்கள். அப்படியில்லை. திரைப்படங்களைப் பார்க்க மக்கள் மெனக்கெட்டு தியேட்டருக்குச் செல்ல வேண்டும். ஆனால் டி.வி அப்படியல்ல, டிவி மூலம் நாம் தினந்தோறும் ரசிகர்களின் வீடுகளுக்குள் நுழைகிறோம். திரைப்படங்களை மக்கள் விரும்பினால் மட்டுமே காசு கொடுத்து டிக்கெட் புக் செய்து தியேட்டருக்கு வந்து பார்ப்பார்கள். ஆனால் டி.வி அப்படியல்ல, நல்ல தரமான, கிரியேட்டிவ்வான கதைக் களங்களோ, ரியாலிட்டி கண்டெண்டுகளோ இருந்தால் மக்கள் நிச்சயம் அந்த நிகழ்ச்சிகளை வீட்டில் இருந்து கொண்டே கண்டிப்பாக ரசித்துப்பார்ப்பார்கள். அத்தகைய நிகழ்ச்சிகள் நிச்சயம் வெற்றி பெறும். இதை உணர்ந்து தானோ என்னவோ பாலிவுட் ஸ்டார்கள் பலர் டி.வி ஷோக்களில் பங்கேற்பதை பெரிதும் விரும்புகிறார்கள். ஆனால்  கோலிவுட்டில் அந்த முன்னேற்றம் இன்னும் வரவில்லை. தமிழ்நாட்டில் மக்களிடையே திரைப்படங்களை விட டி.வி ரீச் அதிகம். இதை நாம் உணர்ந்து கொள்ளும் நாள் விரைவில் வரும். அதுவரை அதற்கான வெற்றிடம் அப்படியே தான் இருக்கும்.

எங்க வீட்டு மாப்பிள்ளை ஷோவைப் பொருத்தவரை அதில் கலந்து கொண்ட 16 பெண்களைப் பற்றியும் நிகழ்ச்சியைப் பார்த்து ரசித்த பார்வையாளர்களைக் காட்டிலும் உடனிருந்து பழகிய நான் நன்கு அறிவேன். எனக்கு என் திருமணத்தை விட அந்தப் பெண்களுடனான நட்பிலும், அவர்கள் என் மீது வைத்த நம்பிக்கையிலும் எந்த விரிசலும் வந்து விடக்கூடாது எனும் உணர்வு அதிகமிருந்தது. ஏனென்றால், நாங்கள் நிகழ்ச்சியைத் தொடங்கும் போது , இது புதுமையான நிகழ்ச்சி, மக்கள் விரும்பி பார்ப்பார்கள், எனக்கொரு வாழ்க்கத்துணை தேடும் முயற்சியில் நான் வெற்றி பெறுவேனா? என்றெல்லாம் ஆச்சர்ய எதிர்பார்ப்புடனும் ஆர்வத்துடனும் தான் தொடங்கினோம். அப்போது நாங்கள் முழுவதுமாக உணர்ந்திருக்கவில்லை. இது எத்தனை எமோஷனலான விஷயம் என்று. சில விஷயங்களை அனுபவத்தால் தான் உணரமுடியுமென்பார்கள். அப்படித்தான், நிகழ்ச்சிக்காக ஒவ்வொரு பெண்ணின் பெற்றோருடனும், உறவினர்களுடனும் பேசப் பேச, அந்தப் பெண்களுடன் பழகப் பழக அவர்களில் யாராவது ஒருவரை தேர்ந்தெடுப்பது எனக்கு மிகக் கஷ்டமான காரியம் என்று தோன்றியது. நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்களில் யாராவது ஒருவரை மட்டுமே நான் தேர்ந்தெடுத்திருந்தால் நிச்சயம் அது மற்றவர்களைக் காயப்படுத்தி இருக்கும். நான் அதைத் தவிர்க்க நினைத்தேன்.

அது மட்டுமல்ல, அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதால் நான் மட்டுமே பலன் பெற வேண்டும் என நான் நினைக்கவில்லை. பங்கேற்ற பெண்கள் அனைவருமே அவரவர் துறையில் பாப்புலராகி அவரவர்களுக்கான பலன்களைப் பெற வேண்டும் என்று எதிர்பார்த்தேன். சிலருக்கு என் கருத்தில் உடன்பாடு இல்லாமலிருக்கலாம். ஆனால், என்னை நம்பி நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்கள் அனைவரையுமே அவர்கள் எங்களுடன் படப்பிடிப்பில் இருந்தவரை பாதுகாப்பாகவும், சகஜமாகவும்  உணர வைத்து நிகழ்ச்சியை வெற்றிகரமாக முடித்தது எனக்கு மிகப்பெரிய ரிஸ்க். ஆனால், அதன் பலன் நன்றாகவே இருக்கிறது.

Image courtesy: cinima express.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com