பாலாவின் ‘அர்ஜூன் ரெட்டி’ யில் நடிக்க மறுத்த கீர்த்தி சுரேஷின் நெருங்கிய உறவினர் யார்?!

இந்த ஒரு காரணத்திற்காகத் தான் தன் மகளும், நடிகையுமான மேனகா சுரேஷ் ‘ பாலா படத்தில் தனக்கு நடிக்க கிடைத்த அருமையான வாய்ப்பை’ நிராகரித்து விட்டார் என
பாலாவின் ‘அர்ஜூன் ரெட்டி’ யில் நடிக்க மறுத்த கீர்த்தி சுரேஷின் நெருங்கிய உறவினர் யார்?!

நடிகை கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜா அம்மாள் அடிப்படையில் ஒரு ஆங்கில ஆசிரியை, மிக அருமையாக ஆங்கிலம் பேசக்கூடியவர். அந்த தகுதியை அடிப்படையாகக் கொண்டும் ஏற்கனவே பாட்டி ‘ரெமோ’வில் கீர்த்தி சுரேஷின் பாட்டியாகவே நடித்திருந்த அனுபவத்தின் அடிப்படையிலும் தெலுங்கில் சக்கைப் போடு போட்ட அர்ஜூன் ரெட்டியின் தமிழ் ரீமேக்கில் பழம்பெரும் நடிகை காஞ்சனா ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க அணுகப்பட்டார். அர்ஜூன் ரெட்டி திரைப்படத்தைப் பொறுத்தவரை எப்படி நாயகன், நாயகி, நாயகனின் நண்பன் கதாபாத்திரத்துக்கு திரைக்கதையில் முக்கியத்துவம் உண்டோ, அத்தனை முக்கியத்துவம் அந்தப் பாட்டி கதாபாத்திரத்துக்கும் உண்டு. பாட்டியாக நடித்த காஞ்சனா தனது பொறுப்புணர்ந்து மிகக் கச்சிதமாக அந்தப் பாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். படம் தொடங்குவது கூட பேரனின் இயல்பு குறித்த பாட்டியின் உரையாடலோடு தான்... கிளைமாக்ஸுக்கு முன்பு அந்த பாட்டி கதாபாத்திரம் இறந்து விடுவது போல திரைக்கதை.

இந்த ஒரு காரணத்திற்காகத் தான் தன் மகளும், நடிகையுமான மேனகா சுரேஷ் ‘ பாலா படத்தில் தனக்கு நடிக்க கிடைத்த அருமையான வாய்ப்பை’ நிராகரித்து விட்டார் என சரோஜா பாட்டி சமீபத்திய தனது யூ டியூப் நேர்காணலில் பகிர்ந்து கொண்டார்.

திரைப்படத்தில் இறந்து போவது மாதிரியான காட்சிகளில் நடிப்பது உங்களுக்குப் புதிதா? ஏன் பாட்டிக்கு கிடைத்த அருமையான வாய்ப்பை நிராகரித்தீர்கள் என்ற் கேள்விக்கு மேனகாவின் பதில்;

'நான் சில திரைப்படங்களில் அப்படி நடித்திருக்கிறேன் என்பதெல்லாம் வாஸ்தவமானது தான். ஆனால், எனக்கு என் அம்மாவை அப்படியொரு காட்சியில் பார்க்க பயமாக இருக்கிறது. அம்மாவுக்கு நடந்த சில அறுவை சிகிச்சைகளின் போது அவர் எத்தனை கஷ்டப் பட்டார் என்று அருகிலிருந்து பார்த்தவள் நான். அதனால் தான் அம்மா இறந்து போவது போன்ற அந்தக் காட்சியை தெலுங்கு அர்ஜூன் ரெட்டியில் பார்த்ததுமே எனக்கு பயமாகி விட்டது. தெலுங்கில் பாட்டியாக நடித்த காஞ்சனா மேடம் மிக அருமையாக நடித்திருக்கிறார். அம்மாவுக்கும் அதில் நடிக்க ஆசை தான். இப்போது கூட என்னைத் திட்டிக் கொண்டே தான் இருக்கிறார். ‘ச்சே... பாலா படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை இப்படி அநியாயமாக கெடுத்து விட்டாயே’ என்று ஆனால், எனக்கும், என் சகோதரர்களுக்கும் அம்மா இறப்பது போன்ற காட்சியை நினைத்தால் பயம் என்பதால் நாங்கள் அம்மாவை அனுமதிக்கவில்லை. 'என்கிறார் சிரித்துக் கொண்டே.

நல்ல மகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com