Enable Javscript for better performance
நடிகர் அசோக் செல்வன் காதலிக்கும் இளம் பாடகி யார்?- Dinamani

சுடச்சுட

    

    நடிகர் அசோக் செல்வன் காதலிக்கும் இளம் பாடகி யார்?

    By சினேகா  |   Published on : 14th May 2018 06:04 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    super_singer

     

    விஜய் டிவியில் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான சூப்பர் சிங்கரின் மூலம் பிரபலமானவர் பிரகதி குருபிரசாத். இவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர், சூப்பர் சிங்கருக்காக சென்னைக்கு வந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் வெற்றிக்குப் பிறகு சில திரைப்படங்களில் பாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. சொந்தமாக ஆல்பம் தயாரித்து வெளியிட்டு வருகிறார் பிரகதி.

    நடிகர் அசோக் செல்வன் சூது கவ்வும், தெகிடி, பீட்சா 2, வில்லா உள்ளிட்ட பல படங்களில் நடித்து வரும் தமிழ் நடிகர். தற்போது பிரகதியும் அசோக் செல்வனும் காதலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த இளம் ஜோடி இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. இவர்களின் ஜோடிப் பொருத்தத்தைப் பாராட்டியும் வருகின்றனர் நெட்டிசன்கள்.

    பிரகதி அசோக் செல்வனை விரைவில் பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்ய உள்ளதாக வதந்தி கோலிவுட்டில் நிலவினாலும், இவ்விஷயத்தை மறுத்தோ ஆதரித்தோ எவ்வித கருத்தையும் இருவரும் கூறியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai