அவர் மாஸ்டர், நாம் அவருடைய சீடர்கள்: சிவாஜி குறித்து அமிதாப் பச்சன் பிரமிப்பு!
சிவாஜி கணேசன், தமிழ்த் திரையுலகின் புகழ்பெற்ற நடிகர். அவருடைய புகைப்படம் சுவற்றை அலங்கரிக்கிறது...


தமிழ்வாணன் இயக்கத்தில் எஸ். ஜே. சூர்யா, அமிதாப் பச்சன் நடிக்கும் படம் - உயர்ந்த மனிதன். தயாரிப்பு - திருச்செந்தூர் முருகன் புரொடக்ஷன்ஸ். அமிதாப் பச்சன் தமிழில் நடிக்கும் படம் இது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ள நிலையில், ட்விட்டரில் அமிதாப் பச்சன் சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்களில் அவரும் எஸ்.ஜே. சூர்யாவும் உள்ளார்கள். அவர்கள் இருக்கும் வீட்டின் சுவற்றில் சிவாஜியின் புகைப்படம் மாட்டப்பட்டுள்ளது. இதைவைத்து ட்விட்டரில் அமிதாப் பச்சன் கூறியதாவது:
மாஸ்டரின் நிழலில் இரு சிஷ்யர்கள் - நானும் எஸ்.ஜே. சூர்யாவும். சிவாஜி கணேசன், தமிழ்த் திரையுலகின் புகழ்பெற்ற நடிகர். அவருடைய புகைப்படம் சுவற்றை அலங்கரிக்கிறது. அவர் மீது மரியாதையும் வியப்பும் ஏற்படுகிறது. அவர் பாதம் தொட்டு வணங்குகிறேன். அவர் மாஸ்டர், நாம் அவருடைய சீடர்கள் என்று கூறியுள்ளார்.


தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...