'மாளிகை’ என்ற பட அறிவிப்பைத் அடுத்து ஆண்ட்ரியா நடிக்கும் படங்கள் பற்றிய அறிவிப்புகள் எதுவும் வராத நிலையில், அவரது ரசிகர்கள் ஆண்டிரியாவுக்கு என்ன ஆனது என்று ஆர்வமாக காத்திருந்தனர்.

இந்நிலையில், நடிப்புக்கு சிறிய இடைவேளை கொடுத்திருந்த ஆண்டிரியா, திடீரென்று ப்ரேக் எடுத்ததன் காரணத்தை விளக்கமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகிய புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

'வணக்கம் சமூக ஊடகங்கள் மற்றும் பொது வாழ்க்கையிலிருந்து எனக்கு மிகவும் தேவைப்பட்ட இடைவெளிக்குப் பிறகு நான் திரும்பி வந்துள்ளேன்! எனது மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை என்னை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும், உணர்ச்சிரீதியாகவும் பாதித்திருந்தது, எனவே நான் சிறிது காலம் யாவற்றிலிருந்தும் விடுபட்டு, என் வாழ்க்கையில் முதன்முறையாக ஒரு ஆயுர்வேத மருத்துவ முறையை முயற்சிக்க முடிவு செய்தேன் அதுதான் காரே (KARE).

என்னைப் போன்ற ஒரு காஃபி போதைக்கு அடிமையானவர்களுக்கு இது எளிதானது அல்ல. ஆனால் ஒரு கப் மூலிகை தேநீர் மற்றும் ஐயங்கார்யோகா ஒரு நாளின் மிக நல்ல தொடக்கமாகும்! வீரேச்சனா முறை என்பது பலவீனமான இதயம் உள்ளவர்களுக்கானது அல்ல, நான் ஓடிப் போய்விட விரும்பிய சமயங்கள் இருந்தன.
.jpg)
ஆனால் நான் அதையெல்லாம் கடந்து, மருத்துவர்கள் பரிந்துரைத்த முறைகளை மிகச் சரியாக பின் பற்றினேன்.

தற்போது நான் புதியவளாக என்னை உணர்கிறேன். டாக்டர் பிரகாஷ் கல்மேட் தலைமையிலான KARE-வில் உள்ள குழுவினருக்கு மிகப் பெரிய நன்றி.

இதோ இப்போது, சமூக மற்றும் பொது வாழ்க்கைக்கு நான் மீண்டு(ம்) வந்துள்ளேன்!’

வெல்கம் பேக் ஆண்டிரியா என்று ரசிகர்கள் வரவேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரானிலிருந்து மீட்கப்பட்ட 312 மீனவா்கள் சென்னை வருகை!

கோயில் உழவாரப் பணியின் போது கிடைத்த கற்சிலைகள்!
மக்களாட்சியின் மகத்துவம்!

நெல் சாகுபடி ஊக்கத் தொகை விவகாரத்தில் விவசாயிகளை திசைதிருப்ப ஸ்டாலின் முயற்சி: மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


