திங்களன்று சிவகார்த்திகேயன் படம் குறித்த புதுத்தகவல் வெளியாகிறது!
வசூலில் பல சாதனைகளை நிகழ்த்திய கடைக்குட்டி சிங்கம் படத்தை இயக்கிய பாண்டிராஜை மலை போல் நம்பியுள்ளார் சிவகார்த்திகேயன்...


கடைக்குட்டி சிங்கம் படத்துக்குப் பிறகு இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி வரும் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் கதாநாயகியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார். தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்துள்ள அனு இம்மானுவேல், தமிழில் இதற்கு முன்பு, துப்பறிவாளன் படத்தில் நடித்திருந்தார். ஐஸ்வர்யா ராஜேஷ், சூரி, யோகி பாபு, பாரதிராஜா, சமுத்திரக்கனி, நடராஜன், ஆர்கே சுரேஷ் என ஒரு பெரிய நடிகர் பட்டாளமே இப்படத்தில் நடிக்கிறது. ஒளிப்பதிவு - நிரவ் ஷா, படத்தொகுப்பு - ஆண்டனி ரூபன். இசை - இமான். படப்பிடிப்பு மே 8 அன்று தொடங்கியது.
இந்நிலையில் வரும் திங்களன்று இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளிவரவுள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
ஆர். ரவிக்குமார், மித்ரன், விக்னேஷ் சிவன் ஆகிய இயக்குநர்களின் படங்களிலும் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இதில் மித்ரன் இயக்கி வரும் ஹீரோ படம் டிசம்பர் 20 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் தன்னுடைய மார்க்கெட்டை, அந்தஸ்த்தை மீண்டும் நிரூபிக்கவேண்டிய நிலைமையில் உள்ளார் சிவகார்த்திகேயன். சமீபத்திய அவருடைய படங்களான வேலைக்காரன், சீமராஜா, மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்கள் வசூலில் எவ்வித ஆச்சர்யங்களையும் ஏற்படுத்தவில்லை. சீமராஜா, மிஸ்டர் லோக்கல் படங்களைப் பெரும்பாலான ரசிகர்கள் விரும்பவில்லை. இந்த விதத்தில் இவ்விரு படங்களும் சிவகார்த்திகேயனைப் பின்னுக்குத் தள்ளிவிட்டன. 2016-ல் வெளியான ரஜினி முருகன், ரெமோ ஆகிய இரு படங்களையும் ரசிகர்கள் மிகவும் ரசித்தார்கள். இதனால் வசூலிலும் அடுத்தடுத்த உயரங்களைத் தொட்டார் சிவகார்த்திகேயன். ஆனால் கடைசி மூன்று படங்களில் அவ்வித ஏற்றம் அவருக்கு அமையவில்லை. இதனால் பலவிதமான மாற்றங்கள் உருவாகியுள்ளன.
தற்போதைய சூழலில், கடந்த வருடம் வசூலில் பல சாதனைகளை நிகழ்த்திய கடைக்குட்டி சிங்கம் படத்தை இயக்கிய பாண்டிராஜை மலை போல் நம்பியுள்ளார் சிவகார்த்திகேயன். இதனால் சிவகார்த்திகேயன் - பாண்டிராஜ் கூட்டணியில் உருவாகி வரும் படத்தின் ஃபர்ட்ஸ்ட் லுக் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...