சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாகாஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!

இந்த வாரம் வெளியாகவுள்ள மூன்று தமிழ்ப் படங்கள்!

ரசிகர்களும் திரையரங்குகளும் இதற்குத் தயாராகி வருகிற வேளையில் இந்த வாரம் மூன்று தமிழ்ப்படங்கள் வெளியாகவுள்ளன...

Published On :

அடுத்த வாரம் ஆகஸ்ட் 30 அன்று பிரபாஸ் நடித்த சாஹோ படம் வெளியாகிறது. ரசிகர்களும் திரையரங்குகளும் இதற்குத் தயாராகி வருகிற வேளையில் இந்த வாரம் மூன்று தமிழ்ப்படங்கள் வெளியாகவுள்ளன.

வியாழன் அன்று கென்னடி கிளப் படமும் வியாழன் அன்று மெய், பக்ரீத் ஆகிய படங்களும் வெளியாகவுள்ளன. திரையரங்குகள், சசிகுமார் நடித்த கென்னடி கிளப் படத்துக்கு முன்னுரிமை அளித்துள்ளன. கடந்த இரு வாரங்களாக வெளியான நேர்கொண்ட பார்வை, கோமாளி ஆகிய படங்கள் அபார வசூல் கண்ட நிலையில் இந்தப் படத்தின் மீதும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் மகளிர் கபடி விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம் - கென்னடி கிளப். சசிகுமார், பாரதிராஜா, மீனாட்சி, காயத்ரி, நீது, செளம்யா, சூரி, முனிஷ்காந்த் போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - இமான். இந்தப் படம் ஆகஸ்ட் 15 அன்று வெளியாவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஆகஸ்ட் 22 அன்று வெளிவரவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.