மும்பை: பிரபல நடிகர் விஜயுடன் 'நண்பன்' படத்தில் ஜோடியாக நடித்தவரான நடிகை இலியானா தனது காதலரை பிரிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல நடிகர் விஜயுடன் 'நண்பன்' படத்தில் ஜோடியாக நடித்தவர் நடிகை இலியானா. ஒரே சமயத்தில் தெலுங்கு மற்றும் தமிழில் பிரபல நடிகையாக விளங்கியவர். அதேசமயம் ஹிந்தியில் 'பாரஃபி' என்னும் வெற்றி படத்திலும் சிறப்பாக நடித்திருந்தார்.
இலியானாவும், ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞரான ஆண்ட்ரூவ் நீபோனும் காதலித்து வந்தனர். இருவரும் பொது இடங்களில் ஜோடியாக சுற்றி வந்தார்கள். இலியானாவின் படப்பிடிப்பு நடக்கும் இடங்களுக்கு எல்லாம் ஆண்ட்ரூவ் தவறாமல் வந்து விடுவார். இருவரும் ரகசியத் திருமணம் செய்து கொண்டதாகக் கூட சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது.
பிரபல புகைப்பட பகிர்வு சமூக வலைத்தளமான இன்ஸ்ட்டாகிராமில் இலியானா ஆர்வமாக செயல்பட்டு வந்தார். காதலர்கள் இருவரும் நெருக்கமாக படம் எடுத்து இன்ஸ்ட்டாக்ராமில் பதிவிட்டு வந்தனர். அதில் வெளியான இலியானாவின் பெரும்பாலான கவர்ச்சி புகைப்படங்கள் ஆண்ட்ரூவால் எடுக்கப்பட்டவைதான். தனது பதிவுகளில் கூட இலியானா அவரை 'சிறந்த கணவன்' என்னும் பொருளில்தான் என்று குறிப்பிட்டு வந்தார்.
இந்நிலையில் இலியானா தனது காதலரை பிரிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருவரும் பிரிந்து விட்டதாகவும் இருவரும் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்வதோ , சந்தித்துக் கொள்வதோ இல்லை என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதை உறுதிப்படுத்தும் விதமாக இலியானா மற்றும் ஆண்ட்ரூ இருவரும் இன்ஸ்டாகிராமில் ஒருவரை ஒருவர் பின்தொடரவில்லை, மேலும் இருவரும் இடம்பெற்றுள்ள புகைப்படங்களையும் இருவருமே தங்கள் கணக்கிலிருந்து நீக்கியுள்ளனர்.
இந்த செய்தி குறித்து செய்தி நிறுவனமொன்றுக்கு அளித்த பேட்டியில் இலியானா, "ஒரு உறவு அல்லது காதல் என்ன என்பது பற்றி எனக்கு வேறுபட்ட கருத்து இருந்தது. ஆனால் அது மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. அதைத் தக்க வைக்க சில சூழ்நிலைகளில் சமரசம் செய்து கொள்ள வேண்டும். உங்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் உள்ளன. முக்கியமாக உங்களுக்கு நிறைய மரியாதை கிடைக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஐடி பங்குகள் தொடர் விற்பனையால் சென்செக்ஸ் 607 புள்ளிகளுடனும், நிஃப்டி 155 புள்ளிகள் சரிவு!

ஆந்திரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சடலங்களாக கண்டெடுப்பு

தில்லி கேபிடல்ஸின் பயிற்சியாளராகும் யுவராஜ் சிங்!

சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் முதல் பாடல்!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



