ஆர்யா நடித்துள்ள 'மகாமுனி': நச்சென்ற நான்கு நிமிடக் காட்சி வெளியீடு
'மெளனகுரு ' திரைப்பட இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள மகாமுனி படத்திலிருந்து நான்கு நிமிடக்காட்சி வெளியாகியுள்ளது.


சென்னை: 'மெளனகுரு' திரைப்பட இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள மகாமுனி படத்திலிருந்து நான்கு நிமிடக்காட்சி வெளியாகியுள்ளது.
ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள மகாமுனி படத்தில் ஆர்யா, நடிகை மஹிமா நம்பியார், இந்துஜா, ஜுனியர் பாலையா, ஜெயப்ரகாஷ், அருள்தாஸ், ஜி எம் சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் சாந்தகுமார். இவர் ஏற்கெனவே மெளனகுரு படத்தை இயக்கி கவனம் ஈர்த்தவர்.
சாந்தகுமாரின் படம் என்பதால் இந்தப் படத்துக்கு ஒரு எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் இந்தப் படம் செப்டம்பர் 6-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மகாமுனி படத்திலிருந்து நான்கு நிமிடக்காட்சி 'ஸ்னீக் பீக்' என்ற வகையில் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...