பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தீவிர விரதம் இருக்கும் நயன்தாரா!

நயன்தாரா ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் "மூக்குத்தி அம்மன்' படத்தில் அம்மன் வேடத்தில் நடிக்கிறார்.

News image
nayanthara
Updated On :1 டிசம்பர் 2019, 12:01 pm

DIN

நயன்தாரா ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் "மூக்குத்தி அம்மன்' படத்தில் அம்மன் வேடத்தில் நடிக்கிறார். இதற்காக தீவிர விரதம் மேற்கொண்டு வருகிறார். அடுத்து அவரது நடிப்பில் "நெற்றிக்கண்' படம் உருவாகிறது. 

இந்தப் படத்தை அவரது காதலரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார். இந்தப் படத்தை மிலிந்த் ராவ் இயக்குகிறார். இவர் சித்தார்த், ஆண்ட்ரியா நடித்த "அவள்' படத்தை இயக்கியவர். கொரியா படமான "பிளைண்ட்' படத்தைத் தழுவி "நெற்றிக்கண்' உருவாகிறது. பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் வழக்கு ஒன்றினை விசாரித்து வருகிறார்.

திடீரென விபத்தில் சிக்கும் அவர் பார்வையை இழக்கிறார். தொடர்ந்து அந்த வழக்கை அவர் எப்படி முடிக்கிறார் என்பதை விறுவிறுப்பாகச் சொல்லும் க்ரைம் திரில்லர் படமாக உருவாகிறது. இதே படம் ஹிந்தியிலும் ரீமேக் ஆக உள்ளது. நயன்தாரா வேடத்தில் சோனம் கபூர் நடிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.