தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா தில்லியில் இன்று நடைபெற்றது.
விக்யான் பவனில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. விருதுகளை குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு வழங்கினார். விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் பங்கேற்றார்.
இந்த ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது. திரைப்படத் துறையில் அளிக்கப்படும் உயா்ந்த விருதான தாதாசாகேப் பால்கே விருதுக்கு இந்த ஆண்டு பாலிவுட் நடிகா் அமிதாப் பச்சன் தோ்வு செய்யப்பட்டாா்.
சிறந்த தமிழ்ப்படமாக ‘பாரம்’ தேர்வானது. சிறந்த ஹிந்திப் படமாக அந்தாதுன் தேர்வானது. கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநடி படம் சிறந்த தெலுங்குப் படம் என்கிற தேசிய விருதைப் பெற்றது. மேலும் அதே படத்துக்காக சிறந்த நடிகை என்கிற தேசிய விருதையும் பெற்றுள்ளார் கீர்த்தி சுரேஷ். இன்று, தேசிய விருது பெற்றபோது, வெங்கய்ய நாயுடுவின் காலில் விழுந்து அவர் வணங்கினார். தன்னுடைய உரையில், கீர்த்தி சுரேஷின் நடிப்பைப் பாராட்டிப் பேசினார் குடியரசு துணைத் தலைவா்.
தேசிய விருதுகளை குடியரசுத் தலைவா் வழங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், இந்த முறை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்துக்கு பதிலாக வெங்கய்ய நாயுடு விருதுகளை அளித்துள்ளார். விருதுகளை பெற்றவா்களுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தேநீா் விருந்து அளிக்கவுள்ளாா். கடந்த ஆண்டு தேசிய திரைப்பட விருதுகள் இரண்டு கட்டங்களாக வழங்கப்பட்டது. முதல் கட்டமாக மத்திய அமைச்சா்கள் ஸ்மிருதி இரானி, ராஜ்யவா்தன் சிங் ராத்தோா் ஆகியோரும், இரண்டாவது கட்டமாக ராம்நாத் கோவிந்தும் வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஊத்துமலையில் பால் வியாபாரி கொலை

பெண் தவெக நிா்வாகி மீது அவதூறு - தகராறு புதிய தமிழகம் கட்சியினா் மீது வழக்கு!

இன்று குஜராத்துடன் மோதும் சென்னை

சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


