கேக் வெட்டி ரசிகரின் பிறந்தநாளை கொண்டாடிய விஜய் சேதுபதி
தளபதி 64 படத்தில் விஜய்க்கு விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.


தளபதி 64 படத்தில் விஜய்க்கு விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது ஷிவமோகாவில் நடந்து வருகிறது.
விஜய்யும் விஜய் சேதுபதி மோதிய சண்டைக் காட்சிகளை அண்மையில் படமாக்கினார் இயக்குநர். இந்நிலையில் பிறந்தநாள் கொண்டாடிய ரசிகர் ஒருவர் கேக்குடன் தளபதி 64 படப்பிடிப்பு தளத்திற்கு வந்துள்ளார். அவரது கோரிக்கையை ஏற்ற விஜய் சேதுபதியிடம் விஷயத்தை சொல்ல கேக் வெட்டி ரசிகருக்கு ஊட்டிவிட்டார். அங்கு எடுக்கப்பட்ட விடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...