எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்ட கலைஞர்களுக்கு கலைமாமணி விருது

நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்ட பல்வேறு கலைஞர்களுக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :28 பிப்ரவரி 2019, 2:34 pm

DIN

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்ட பல்வேறு கலைஞர்களுக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இயல்,  இசை, நாடகம் மற்றும் கலைத்துறையைச் சார்ந்த கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசின் கலைமாமணி விருது  வழங்கப்படுவது வழக்கம்.

ஆனால் கடந்த 2011-ஆம் ஆண்டுக்குப் பிறகு கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்படவே இல்லை.  எட்டு ஆண்டுகளுக்கு சேர்த்து தற்போது மொத்தமாக விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்ட பல்வேறு கலைஞர்களுக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இயல் பிரிவில் புலவர் புலமைப்பித்தன், கவிஞர் சுப்பு ஆறுமுகம், சிவசங்கரி ஆகியோருக்கு பாரதி விருதும், இசைப்பிரிவில் எஸ்.ஜானகி, சரோஜா, லலிதா, டி.வி.கோபாலகிருஷ்ணனுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதும் வழங்கப்பபட்டுள்ளது.

அதேபோல் வைஜெயந்தி மாலா பாலி, வி.பி.தனஞ்ஜெயன், சி.வி.சந்திரசேகருக்கு பால சரஸ்வதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர்களில் விஜய் சேதுபதி, பிரபு தேவா, விஜய் ஆண்டனி, சசிகுமார், நகைச்சுவை நடிகர்கள் சந்தானம், சூரி, நாட்டுப்புற பாடகர்கள் பரவை முனியம்மா, வேல்முருகன் ஆகியோருக்கும் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.