/

எங்களுடைய திரையரங்கில் அதிகமாக வசூலித்த படம் இதுதான்: குரோம்பேட்டை வெற்றி திரையரங்கம் அளிக்கும் ஆச்சர்யத் தகவல்!

அவர் அளித்த தகவலின்படி, குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் இதுவரை வெளியான படங்களில் அதிகமாக வசூலித்தது...

News image
Updated On :17 ஜனவரி 2019, 9:21 am

எழில்

சென்னையின் புறநகர்ப் பகுதியான குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கம் மிகவும் புகழ்பெற்றது. பலவருடங்களாக அப்பகுதியில் இயங்கிவருகிறது. இந்தத் திரையரங்கின் நிர்வாக இயக்குநர் ராகேஷ் கெளதமன், ஒவ்வொரு வருட இறுதியிலும் அந்தந்த வருடத்தின் டாப் 10 பட்டியலை வெளியிடுவார். அதேபோல வெற்றி திரையரங்கம் இயங்க ஆரம்பித்த 1973-ம் வருடம் அதிகமாக வசூலித்த படம் குறித்த தகவலை இன்று அவர் வெளியிட்டுள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய் குமார் நடித்துள்ள 2.0 படம் இன்று 50-வது நாளைக் கொண்டாடுகிறது. இந்த நாளில் அவர் அளித்த தகவலின்படி, குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் இதுவரை வெளியான படங்களில் அதிகமாக வசூலித்தது 2.0 படம்தான் என்கிற தகவலை ராகேஷ் கெளதமன் வெளியிட்டுள்ளார். இந்த வசூல் தொகையில் 3டி கண்ணாடிகளின் வருமானம் சேர்க்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.