நடிகர் விஜய் சேதுபதி தனது 41-ஆவது பிறந்தநாளை புதன்கிழமை (ஜன. 16) கொண்டாடினார். இதையடுத்து திரையுலகில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்தன. அதுமட்டுமல்லாமல் ரசிகர்களின் அன்பு மழையிலும் விஜய் சேதுபதி கொண்டாடப்பட்டார்.
திரையுலகில் மக்கள் செல்வன் என்றழைக்கப்படும் விஜய் சேதுபதி எப்போதுமே தனது ரசிகர்களிடம் மிகவும் நெருக்கமாக பழகி வருகிறார். இதனால் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது.
இந்நிலையில், தன்னுடைய பிறந்தநாளுக்காக ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் கூடிய விருந்து படைத்தார். அது, தான் நடித்து வரும் அடுத்தடுத்த படங்களின் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவை அவருடைய பிறந்தநாள் பரிசாக வெளியிடப்பட்டன.
அவை தமிழில் நடித்து வரும் சிந்துபாத் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தெலுங்கில் நடித்து வரும் ஸைரா நரசிம்மா ரெட்டி திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் ஆகும்.
தற்போதைய நடிகர்களில் மிகப்பெரிய இடைவெளி இல்லாமல் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதியின் இந்த டபுள் ட்ரீட், அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜன நாயகன் இணையதளத்தில் வெளியானதற்கு எல். முருகன்தான் பொறுப்பு: கே.ஏ.செங்கோட்டையன்

ராமதாஸிடம் நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!

தன்னை இயேசுவாக சித்திரிக்கும் படத்தை வெளியிட்ட டிரம்ப்!!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


