என் வாழ்க்கைத் துணையிடம் பாசாங்கு என்பதே கிடையாது: விராட் கோலியைப் புகழும் அனுஷ்கா சர்மா!
என் கணவருடைய நேர்மையை நான் மிகவும் மதிக்கிறேன். நான் ஒரு நேர்மையான பெண்...


என் கணவரிடம் பாசாங்கு என்பதே கிடையாது என நடிகையும் பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா கூறியுள்ளார்.
ஒரு பேட்டியில் அனுஷ்கா சர்மா கூறியுள்ளதாவது:
என் கணவருடைய நேர்மையை நான் மிகவும் மதிக்கிறேன். நான் ஒரு நேர்மையான பெண். அதனாலேயே பல பாதிப்புகளை அடைந்துள்ளேன். அவரும் அநியாத்துக்கு நேர்மையானவர்தான்.
அவரைப் போன்ற ஒருவரை என் வாழ்வில் சந்தித்ததை எண்ணி மகிழ்கிறேன். நாங்கள் இருவருமே எங்கள் வாழ்வை முழுமையான நேர்மையுடன்தான் வாழ்கிறோம். அது மிகவும் வெளிப்படையானது, சரியானது. என்னுடைய வாழ்க்கைத் துணையிடம் பாசாங்கு என்பதே கிடையாது. அவரிடம் எல்லாமே நிஜமானது. நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் நன்கு ஆதரவளித்துக்கொள்வோம். தனிப்பட்டமுறையிலும் தொழிலும் தன்னை மேம்படுத்திக்கொள்ள அவர் எப்போதும் முயல்வார். நானும் அப்படித்தான். நாங்கள் எங்களை சீரியஸாக எடுத்துக்கொள்ளமாட்டோம். பொதுமக்களைப் போலத்தான் நாங்களும். அதனால்தான் எல்லோரிடமும் நன்குப் பழகுகிறோம் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...