புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

முதல் மூன்று நாள்களில் அபார வசூல்: தி லயன் கிங் சாதனை!

இந்தியாவில் முதல் வார இறுதியில் அதிகமாக வசூலித்த 3-வது படம் என்கிற பெருமையைப் பெற்றுள்ளது தி லயன் கிங்...

News image
Updated On :22 ஜூலை 2019, 11:20 am

எழில்

இந்தியாவில் முதல் வார இறுதியில் அதிகமாக வசூலித்த 3-வது படம் என்கிற பெருமையைப் பெற்றுள்ளது தி லயன் கிங்.

உலகம் முழுக்க வசூலில் சாதனை நிகழ்த்திய தி ஜங்கிள் புக் படத்தை இயக்கிய ஜோன் ஃபவ்ரே தற்போது தி லயன் கிங் படத்தை இயக்கியுள்ளார். 1994-ல் அனிமேஷன் படமாக வெளிவந்த படத்தின் ரீமேக்தான் இது. 

லயன் கிங் படம் இந்தியாவில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு என நான்கு மொழிகளில் 2140 திரையரங்குகளில் கடந்த வெள்ளியன்று வெளியானது.

இந்நிலையில் இந்தப் படம் இந்தியாவில் முதல் மூன்று நாள்களில் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. அதாவது, தி ஜங்கிள் புக் படத்தின் வசூலை (ரூ. 40 கோடி) விடவும் அதிக வசூல். 

2019-ம் ஆண்டு டிஸ்னி இந்தியா நிறுவனத்துக்கு அற்புதமாக அமைந்துள்ளது. மார்ச் மாதம் - கேப்டன் மார்வல், ஏப்ரல் மாதம் - அவெஞ்சர்ஸ் எண்ட்கேம், மே மாதம் - அலாதீன், ஜூலை மாதம் - தி லயன் கிங் என அனைத்துப் படங்களும் இந்தியாவில் வசூலில் சாதனை செய்துள்ளன. 

வெள்ளியன்று வெளியான தி லயன் கிங் படம் முதல் நாளன்று  ரூ. 11 கோடியும் 2-வது நாளன்று ரூ. 19 கோடியும் 3-வது நாளான நேற்று ரூ. 25 கோடியும் வசூலித்துள்ளது. இதன்மூலம் இந்தியாவில் நான்கு மொழிகளிலும் சேர்த்து முதல் 3 நாளில் ரூ. 55 கோடி வசூல் கிடைத்துள்ளது. 

இந்தியாவில் முதல் வார இறுதியில் அதிகமாக வசூலித்த ஹாலிவுட் படங்களில் - அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படம் ரூ. 159 கோடியும் அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் ரூ. 94 கோடியும் வசூலித்த நிலையில் தி லயன் கிங் படம் ரூ. 55 கோடியுடன் 3-ம் இடத்தைப் பிடித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.