ரஜினி நடிக்கும் தர்பார் படம்: போட்டி அறிவிப்பை வெளியிட்டார் ஏ.ஆர். முருகதாஸ்!
தர்பார் படத்தின் புதிய இரு போஸ்டர்களைப் பகிர்ந்த இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், இப்படங்களை வைத்து புதிய டிசைனுடன் போஸ்டர்களை...


சர்கார் படத்தையடுத்து ரஜினி நடிக்கும் தர்பார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன். இசை - அனிருத். இது ரஜினி நடிக்கும் 167-வது படம்.
லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் அடுத்த வருடப் பொங்கல் தினத்தன்று படம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினியின் ஜோடி - நயன்தாரா. இந்தப் படத்தில் காவல் அதிகாரியாக நடித்து வருகிறார் ரஜினி. தர்பார் படத்தின் வில்லனாக பாலிவுட் நடிகர் பிரதீக் பப்பர் நடிக்கிறார்.
இந்நிலையில் தர்பார் படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. தர்பார் படத்தின் புதிய இரு போஸ்டர்களைப் பகிர்ந்த இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், இப்படங்களை வைத்து புதிய டிசைனுடன் போஸ்டர்களை டிசைன் செய்து கொடுக்க ரசிகர்களுக்கு போட்டி வைத்துள்ளார். அருமையாக டிசைன் செய்து கொடுக்கும் ரசிகரின் போஸ்டர், அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...