சந்தானம் நடித்த ஏ1 படத்தை பிராமணர்கள் புறக்கணிக்க வேண்டும்: தமிழ்நாடு பிராமணர் சங்கம் கோரிக்கை
இந்தப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அதனால் விளம்பரம் தேடிக்கொடுத்திட வேண்டாம் என...


சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள படம் - ஏ1. இயக்கம் - ஜான்சன். இவர், நாளைய இயக்குநர் சீஸன் 2-வில் பட்டம் வென்றவர். இசை - சந்தோஷ் நாராயணன். நேற்று இந்தப் படம் வெளியானது.
இந்நிலையில் இந்தப் படத்தை பிராமணர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பிராமணர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ஏ1 படத்தில் பிராமண சமூகத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் காட்சி அமைத்துள்ள நடிகர் சந்தானத்துக்கு எங்களுடைய எதிர்ப்பினையும் கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம். இந்தப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அதனால் விளம்பரம் தேடிக்கொடுத்திட வேண்டாம் எனச் சகிப்புத்தன்மையோடு இருந்து வந்தோம். ஆனால் படம் தொடர்பான நிகழ்ச்சியில், தமது ஆட்சேபகரமான காட்சி அமைப்பினை நடிகர் சந்தானம் நியாயப்படுத்தியுள்ளது பிராமண சமூகத்தினரது உணர்வுகளை மேலும் புண்படுத்தியுள்ளது. சந்தானத்தின் கண்ணியமற்ற இந்தச் செயல்பாட்டினை தாம்ப்ராஸ் சார்பில் எங்களது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
பிராமண சமூகத்தினர் அனைவரும் இந்தத் திரைப்படத்தை புறக்கணிப்பதோடு மட்டுமல்லாமல், தங்களது இதர சமூக நண்பர்களையும் இப்படத்தினைப் புறக்கணித்திட வேண்டுமென்று கேட்டுக்கொள்ள அறிவுறுத்துகிறோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...