2009-ம் ஆண்டு வெளிவந்த படம் அவதார். ஜேம்ஸ் கேம்ரூன் இயக்கத்தில் வெளியான இந்தப் படம், உலகளவில் 2.78 பில்லியன் டாலர் (ரூ. 19,282 கோடி) வசூலை அள்ளி மிகப்பெரிய சாதனை செய்தது. இதையடுத்து, அவதார் 2 படம் டிசம்பர் 17, 2021 அன்று வெளியாகவுள்ளது.
இந்நிலையில் அவதார் என்கிற தலைப்பேயே ஜேம்ஸ் கேம்ரூனுக்கு நான் தான் கொடுத்தேன் என்று கூறியுள்ளார் பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தா. ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:
ஜேம்ஸ் கேம்ரூனுக்கு அவதார் என்கிற தலைப்பை நான் தான் கொடுத்தேன். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. இந்தப் படம் நன்றாக ஓடும், ஆனால் படத்தை முடிக்க உங்களுக்கு ஏழு ஆண்டுகளாகும் என்றேன். அவர் கோபமடைந்தார். ஏழு வருடம் வரை அவதார் படத்தை முடிக்காமல் இருப்பேன் என எப்படிக் கூறுகிறீர்கள் என்று என்னிடம் கேட்டார். முடியாத ஒன்றைக் கற்பனை செய்கிறீர்கள் என்றேன். அவதார் என்று தலைப்பு வைத்துவிட்டு வேற்றிக்கிரகவாசியைக் காண்பித்துள்ளார்.
என்னை நடிக்க அழைத்தார். 410 நாள்கள் கால்ஷீட் கேட்டார். உடம்பு முழுக்க பெயிண்டிங்கைப் பூசிக்கொண்டு என்னால் நடிக்கமுடியாது. எனவே முடியாது என்றேன். என்றாலும் நான் சொன்னதுபோல படம் பெரிய வெற்றியை அடைந்தது என்று கோவிந்தா கூறியுள்ளார்.
ஜேம்ஸ் கேம்ரூன் படம் வெளிவந்தபிறகு 2012-ல் அவதார் என்கிற ஹிந்திப் படத்தில் நடித்தார் கோவிந்தா. ஆனால் அந்தப் படம் வெளிவரவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
போர்க் கப்பல்களை அனுப்பும் பாதிக்கப்பட்ட நாடுகள்: ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்

புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை

சென்னை - போடி விரைவு ரயில் மார்ச் 19 முதல் வாரத்தில் 6 நாள்கள் இயக்கம்!

தில்லி கேபிடல்ஸின் ஆலோசகர் பொறுப்பிலிருந்து கெவின் பீட்டர்சன் விலகல்!
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

