இதைவிட பனிமலையில் புடவையுடன் இருப்பது மிகக் கடினமானது: டாப்ஸி தடாலடி

இதைவிட பனிமலையில் புடைவயுடன் இருப்பது மிகவும் கடினமானது என நடிகை டாப்ஸி வெளியிட்டுள்ள புகைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதைவிட பனிமலையில் புடவையுடன் இருப்பது மிகக் கடினமானது: டாப்ஸி தடாலடி
Published on
Updated on
2 min read

இதைவிட பனிமலையில் புடைவயுடன் இருப்பது மிகவும் கடினமானது என நடிகை டாப்ஸி வெளியிட்டுள்ள புகைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை டாப்ஸி தற்போது பாலிவுட்டில் பிஸி நாயகியாக வலம் வருகிறார். பெண் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, உண்மை சம்பவங்களின் அடிப்படையில் கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார்.

அண்மையில் வெளியான 'பாத்லா’ படம் டாப்ஸி பன்னுவுக்கு நல்ல பெயர் பெற்றுத் தந்தது. படத்தின் இறுதிக் காட்சிகளில் அவரது நடிப்பு அபாரமாக இருந்தது என்று சமூக வளைத்தளங்களில் ரசிகர்கள் பெரிதும் பாராட்டி வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் துப்பாக்கி சுடுதலில் பிரபலமான சந்த்ரோ தோமா, பிரகாஷி தோமா ஆகியோரின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்படும் 'சான்த் கி ஆங்க்' என்ற இந்தி படத்தில் 60 வயது மூதாட்டியாக நடித்துள்ளார் டாப்ஸி.

இந்நிலையில், டாப்ஸி நடிப்பில் அடுத்து 'கேம் ஓவர்' திரைப்படம் ஜூன் 14-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மும்மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

இதுகுறித்து டாப்ஸி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பனிமலையில் புடவை கட்டிக்கொண்டு 25 நாட்கள் ஆடுவதை விட இது மேலானது, இதுதான் நடிகரின் வாழ்க்கை என்று ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

அதில், கேம் ஓவர் படக்காட்சிகளின் போது முகம் மற்றும் கைகளில் ஏற்பட்ட சிராய்ப்பு மற்றும் கால் முறிவு என தனக்கு ஏற்பட்ட காயங்களின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

மேலும், தனக்கு கமர்ஷியல் படங்களில் நடிப்பதை விட, நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் இடம்பெறுவது வசதியாக இருப்பது போன்றும் டாப்ஸி கிண்டலாகப் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com