த்ரிஷா... அடுத்து காஜல் அகர்வாலா?!

தற்போது 33 வயதாகும் காஜல், மஹதீரா, போன்ற மீண்டுமொரு  சூப்பர் ஹிட் திரைப்படத்துக்காக வெயிட்டிங்! 
த்ரிஷா... அடுத்து காஜல் அகர்வாலா?!
Published on
Updated on
2 min read

டோலிவுட்டில் ஒரு காலத்தில் த்ரிஷா பித்துப் பிடித்துத் திரிந்தார் ரசிகர்கள். தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களில் த்ரிஷா இடம் பெற்றார். திடீரென அனுஷ்கா, நயன் தாரா, காஜல் அகர்வால், தமனா என்று ஆக்ரோஷமான கவர்ச்சிப் புயல்கள் மாறி மாறி வந்து அக்கடபூமியைச் சூறாவளியாகச் சூழ்ந்ததில் த்ரிஷா ஒரு ஓரத்தில் காணாமல் போனார். அவர்களின் வருகையால் மட்டுமல்ல, தனது தோல்விப்பட ரெகார்டுகளாலும் தான்.

'என்னை அறிந்தால்' க்குப் பின் திரிஷாவின் நெடுங்கால வெற்றிப்பட ஏக்கம் ஒருபாடாக ‘96’ திரைப்படத்தின் வாயிலாக சற்றே முடிவுக்கு வந்தது. அதே நிலை தான் இப்போது காஜல் அகர்வாலுக்கும்.

காஜல் நடிக்க வந்து முழுதாக 12 ஆண்டுகள் ஆகின்றன. ஆரம்பத்தில் ராசி இல்லாத நடிகை என்று ஒதுக்கப்பட்டாலும் பிறகு அன்றைய முன்னணி நடிகைகள் அத்தனை பேரையும் ஓரங்கட்டி விட்டு தமிழ், தெலுங்கில் டாப் 3 ஹீரோயின்களில் ஒருவராக பிஸியாக நடித்துத் தள்ளிக் கொண்டிருந்தார் காஜல் அகர்வால். தீபாவளி ரிலீஸ் திரைப்படங்களில் தமிழ், தெலுங்கில் தலா அரை டஜன் படங்களில் காஜல் தான் ஹீரோயின் என்றிருந்தது ஒரு காலம்.

ஆனால், இப்போதோ, தெலுங்கில் வெளிவந்த ‘நேனே ராஜூ, நேனே மந்திரி’ திரைப்படத்துக்குப் பின்னர் காஜலுக்கு வெற்றிப்படங்கள் பெரிதாக இல்லை.

கல்யாண் ராமுடன்  நடித்து வெளியான MLA, பெல்லம் கொண்ட ஸ்ரீனிவாஸுடன் ஜோடியாக நடித்து வெளியான ‘கவசம் & சீதா’ எனும் இரு திரைப்படங்கள் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்‌ஷனில் அப்படி ஒன்றும் சாதிக்கவில்லை. இனி வரவிருக்கும் பாரதீயடு 2 விலும் பெரிய சக்சஸ் கிடைக்குமா என்றும் தெரியவில்லை.

தற்போது காஜலின் நிலை, அடுத்தொரு மிகப்பெரிய ஹிட் அடித்தால் தான் தொடர்ந்து ஃபீல்டில் வலம் வர முடியும் என்ற நிலை. தற்போது 33 வயதாகும் காஜல், மஹதீரா, போன்ற மீண்டுமொரு  சூப்பர் ஹிட் திரைப்படத்துக்காக வெயிட்டிங்! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com