
நடிகர் அஜித் குமார் புதிய கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பாலிவுட்டில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் அமிதாப் பச்சன் நடித்த வேடத்தில் அஜித் நடித்துள்ளார். வினோத் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையில், வித்யா பாலன், ஷரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஆகஸ்டு 10-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் அஜித் குமார் ஒவ்வொரு திரைப்படத்துக்கும் தனது கெட்டப்பில் வித்தியாசம் காட்டுவதில் அக்கறை கொண்டவர். குறிப்பாக மங்காத்தா படத்துக்குப் பிறகு வந்த திரைப்படங்களில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிலேயே அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், புதிய கெட்டப்பில் இருக்கும் நடிகர் அஜித்தின் புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது. தல 60 படத்துக்கான கெட்டப்பாக இது இருக்கும் என்று அவரது ரசிகர்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
அதுமட்டுமல்லாமல் இதில் தனக்கு மிகவும் பிடித்த ரேஸ் வீரர் கதாபாத்திரத்திலேயே அஜித் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேர்கொண்ட பார்வை இயக்குநர் வினோத் உடன் தொடர்ந்து 2-ஆவது முறையாக இணையவுள்ளதாகவும், மத்திய கிழக்கு நாடுகளில் படப்பிடிப்பு நடக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.