வழக்கமான பரிசோதனைகளை முடித்து விட்டு அலுவலகம் திரும்பிய மணி ரத்னம்!
வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு மணி ரத்னம் இன்று தனது அலுவலகத்துக்கு வந்து...


இயக்குநர் மணிரத்னம் உடல் நலக் குறைவு காரணமாகப் பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக நேற்றிரவு செய்திகள் வெளியாகின.
ராவணன் படத்தை இயக்கியபோது மணி ரத்னத்துக்கு முதல்முறையாக நெஞ்சு வலி ஏற்பட்டது. பிறகு ஓ காதல் கண்மணி படத்தை இயக்கியபோது மீண்டும் அதே நெஞ்சு வலியின் காரணமாக தில்லி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மீண்டும் அதே பிரச்னைகாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியானதால் ரசிகர்கள் கவலையடைந்தார்கள்.
மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு மணி ரத்னம் இன்று தனது அலுவலகத்துக்கு வந்து வழக்கமான வேலைகளைக் கவனித்து வருகிறார் என்று தகவல் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...