ஜான்வி கபூரின் வைரல் பெல்லி டான்ஸ் விடியோ!

பிங்க் நிற மேலாடையும், உடற்பயிற்சி செய்யப் பொருத்தமான வெள்ளை நிற மினி ஷார்ட்ஸும் அணிந்து ஜான்வி கபூர் இந்த பெல்லி டான்ஸ் சேலஞ்ச் விடியோவை வெளியிட்டது எதற்காக தெரியுமா? ‘டான்ஸ் தீவானே’ நடன ஷோவுக்காக.
ஜான்வி கபூரின் வைரல் பெல்லி டான்ஸ் விடியோ!
Published on
Updated on
1 min read

நளினமாக இடுப்பை அசைத்து ஆடும் பெல்லி டான்ஸை எல்லோராலும் அத்தனை எளிதாக ஆடி விட முடியாது. அதற்கு தீவிர நடன பயிற்சியும் பொருத்தமான உடலமைப்பும் வேண்டும். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் மிகச்சிறப்பாக கதக் நாட்டியம் ஆடக்கூடியவர். அந்தப் பயிற்சி தான் சிறப்பாக பெல்லி டான்ஸ் ஆடும் திறனையும் அவருக்கு அளித்திருக்கிறது.

தனது அறிமுகப்படமான ‘தடக்’ கில் உடன் ஹீரோவாக நடித்த சஷாங் கேதான் பரிந்துரைத்த சவாலை ஏற்று இப்போது தனது பெல்லி டான்ஸ் விடியோவை வெளியிட்டுள்ளார் ஜான்வி. விடியோவில் ஆபாசமாக ஒன்றுமில்லை. ஆனால், சிலர் அந்த சேலஞ்சை குறிப்பிடுகையில் உடற்பயிற்சி செய்யும் போது பயன்படுத்தும் ஸ்போர்ட்ஸ் உள்ளாடைகளுடன் ஜான்வி பெல்லி டான்ஸ் ஆடியிருக்கிறார் என்று அவரது இன்ஸ்டாகிராம் விடியோ பக்கத்திலும் இணையத்திலும் ’கிண்டல் செய்திருக்கிறார்கள்.

பிங்க் நிற மேலாடையும், உடற்பயிற்சி செய்யப் பொருத்தமான வெள்ளை நிற மினி ஷார்ட்ஸும் அணிந்து ஜான்வி கபூர் இந்த பெல்லி டான்ஸ் சேலஞ்ச் விடியோவை வெளியிட்டது எதற்காக தெரியுமா? ‘டான்ஸ் தீவானே’ நடன ஷோவுக்காக. டான்ஸ் தீவானே என்பது நடனத் திறமை நிறைந்தவர்கள், தங்களுக்குத் தெரிந்த விதம் விதமான நடனங்களை மிகத் திறமையாக ஆடிப் பதிவு செய்து ஷோவின் நடுவர்களை ஈர்ப்பதற்கான ஒரு நடன ரியாலிட்டி ஷோ. இதில் மாதுரி தீக்‌ஷித் உட்பட பலர் நடனமாடியிருக்கிறார்கள். அதற்காகத் தான் இப்போது ஜான்வியும் தனது பெல்லி டான்ஸ் நடனத் திறனை விடியோ பதிவாக்கி #Dancedeewane என்றி குறிப்பிட்டு தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியிருக்கிறார்.

அம்மா மாதிரியே பொண்ணும் சூப்பரா டான்ஸ் ஆடும் போலத் தெரியுது. எப்படியோ ஸ்ரீதேவி பெயரைக் காப்பாற்றினால் சரி தான். ஸ்ரீதேவி கோலிவுட்டில் இருந்தவரை அவரது நடிப்பாற்றலுக்காகவும் அழகுக்காகவும் புகழப்பட்டார் என்றால் பாலிவுட் சென்றதும் அவரது நடிப்பாற்றலைத் தாண்டி நடனத்துக்காகத்தான் அதிகமும் புகழப்பட்டார் என்பதை அவரது ரசிகர்கள் அறிவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com