Enable Javscript for better performance
Actor Sivakumar's bold answers About Super Star!- Dinamani

சுடச்சுட

  

  புவனா ஒரு கேள்விக்குறியில் நீங்கள் வில்லனாக நடித்து ரஜினியை சூப்பர் ஸ்டார் ஆக்கி விட்டீர்களே?! என்ற கேள்விக்கு சிவகுமாரின் பதில்!

  By சரோஜினி  |   Published on : 15th June 2019 04:14 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  buvana_oru_kelvikuri

  புவனா ஒரு கேள்விக்குறியில் நீங்கள் வில்லனாக நடித்து ரஜினியை சூப்பர் ஸ்டார் ஆக்கி விட்டீர்களே?! என்ற கேள்விக்கு சிவகுமாரின் பதில்!

  நடிகர் சிவகுமாரைப் பற்றி இன்றைய தலைமுறை தெரிந்து கொள்வதெல்லாம் ஒன்று செல்ஃபோன் தட்டி விட்ட விவகாரமாக இருக்க வேண்டும், அல்லது அவர் நடிகர் சூர்யா, கார்த்தியின் தந்தை என்பதற்காகவே இருக்கிறது. அதைத் தவிர்த்து சிவகுமாரிடம் பாராட்டவும், பின்பற்றவும் தக்க பல விஷயங்கள் இருக்கின்றன. அது யாருக்கேனும் தெரியுமா? இதோ தனது சமீபத்திய நேர்காணலொன்றில் சிவகுமார் தன்னைப் பற்றி பகிர்ந்து கொண்டதில் சில சுவாரஸ்யங்கள் உங்களுக்காக.

  லட்சுமி சிவகுமார் ஜோடியில் அப்படியென்ன ஸ்பெஷல்?

  இதுவரை என்கூட 84  பெண்கள் கதாநாயகியாக நடிச்சிருக்காங்க, அதுல லட்சுமி  எங்கூட 18 படங்களில் ஜோடியா நடிச்சிருக்காங்க. லஷ்மி, சிவகுமார் ஜோடி ஏன் ஸ்பெஷல்ன்னா? என் முதல் கதாநாயகி வயசானவங்கன்னு சொல்லி படத்துல இருந்தே தூக்கிட்டாங்க, இரண்டாவது கதாநாயகி காஞ்சனா, அவங்க ஏர்கோஸ்டஸா இருந்தவங்கன்னு முதல்ல பயந்துட்டே நடிச்சேன். அப்புறம் ஒரு நாள் விளையாட்டா , ஐ லவ் சொல்லிப் பார்ப்போமேன்னு சொன்னதுக்கு அந்தம்மா, போட சின்னப்பையான்னு சொல்லிட்டுப் போயிட்டாங்க, சரிம்மா தேங்க்ஸ்னு வந்துட்டேன். அப்போ தான் தெரிஞ்சது அந்தம்மா என்னை விட வயசானவங்கன்னு. அடுத்து வந்தவங்க நான் சினிமாவுக்குள்ள நுழையுறதுக்கு முன்னாடியே 14 வருஷமா கதாநாயகியா நடிச்சிட்டு இருந்தவங்க.  அவங்க கூட ஹீரோவா நடிச்ச என் நிலைமையை நினைச்சுப்பாருங்க. அப்புறம் எனக்கு ஜோடியா கிடைச்சவங்க தான் லட்சுமி. குமுதத்தில் எழுதி இருந்தாங்க... எங்க ஃபோட்டோவைப் போட்டு, கிழங்கட்டைகளைப் பார்த்துப் பார்த்து அலுத்துப் போன கண்களுக்கு உண்மையிலேயே இளமையோடு இருக்கும் இந்த இரண்டு இளம் உள்ளங்களின் அளவான நடிப்பைப் பார்க்கும் போது இவர்கள் நன்றாக இருக்க வேண்டுமென்று வாழ்த்தத் தோன்றுகிறது’ என்று எழுதி இருந்தார்கள். உண்மையில் எனக்கு பொருத்தமான ஜோடியாக செட் ஆன முதல் நடிகை லட்சுமி. அது தான் ஸ்பெஷல்.

  புவனா ஒரு கேள்விக்குறியில் நீங்கள் வில்லனாக நடித்து ரஜினியை சூப்பர் ஸ்டார் ஆக்கி விட்டீர்களே?! என்ற கேள்விக்கு சிவகுமாரின் பதில்;

  நாம் இந்தப் பூமியில் பிறக்கும் போதே கடவுள் நம் ஒவ்வொருவர் தலையிலும் நாம் எந்தெந்த நேரத்தில், எந்தெந்த இடங்களில் என்னென்னவாக வேண்டும் என்று எழுதித் திணித்து அனுப்பி விடுகிறார். எல்லாம் அப்போதே தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. இதில் ரஜினி என்னால் தான் சூப்பர் ஸ்டார் ஆனார் என்று யாராவது சொன்னால் நான் அதைக் கண்டுகொள்வதில்லை. நான் இல்லை, வேறு யார் அந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் ரஜினி சூப்பர் ஸ்டார் ஆவதைத் தடுத்திருக்க முடியாது. ஒன்றுமில்லை, 16 வயதினிலே படத்தில் கமல் உயிரைக் கொடுத்து நடித்திருப்பார். படம் முழுக்க பேத்தாஸ் வேஷம். ரஜினி பரட்டையாக மூன்று சீனில் வருவார். கடைசியில் ஹீரோயின் ரேப் சீன் இருக்கும். படம் முடிந்ததும் மக்கள் அவரைத் திட்ட வேண்டுமே. ஆனால் பாருங்கள், படத்தில் ரஜினி வரும் சீனில் எல்லாம் ரசிகர்கள் கை தட்டி ஆர்ப்பரிப்பார்கள். அவர் சூப்பர் ஸ்டார் ஆக வேண்டும் என்பது அவரது விதி. அந்தப் பொறாமை எல்லாம் எனக்கு இல்லை. என்று சிரிக்கிறார் சிவகுமார்.

  இந்த நேர்காணலைப் பார்க்கும் போது சிவகுமார் என்ற நடிகன், திரையில் மட்டுமே நடித்திருக்கிறாரே தவிர உண்மையில் அவர் ஒரு சாமான்ய மனிதராகவே வாழ்ந்திருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. இவரிடம் அனாவசியமான அலட்டல்கள் இல்லை. அன்றன்றைய காலகட்டங்களில் தன்னால் எதற்கு முக்கியத்துவம் அளிக்க முடியுமோ அதில் முழுக்க மூழ்கிப்போய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

  இன்றைய சிவகுமாருக்கு ரொம்பப் பிடித்த விஷயம் கம்பராமாயணம். அதில் ஏதேனும் சந்தேகம் என்றால் தாராளமாக இவரை அணுகலாம். அவரது ஓவியங்களைப் பற்றிப் பேசினால் சொல்ல நிறைய விஷயங்கள் வைத்திருக்கிறார். கடந்த கால சினிமா அனுபவங்களில் அவர் சந்தித்த திரை ஜாம்பவன்களைப் பற்றிப் பகிரவும் தன்னிடம் நிறைய விஷயங்கள் வைத்திருக்கிறார் சிவகுமார்... 

  அவற்றையெல்லாம் விட்டு விட்டு... மற்றபடி சிவகுமாரைப் பார்த்ததும் செல்ஃபி எடுக்க ஓடினீர்கள் என்றால் அவர் சிவகுமார் இல்லை கோபகுமார் ஆகி விடுவார். ஜாக்கிரதை!

  Courtesy: ThankS to Touring talkies you tube channel & Chitra Lakshmanan

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai