அறிமுக இயக்குநர் ஹரிஷ் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள தும்பா என்கிற நகைச்சுவை கலந்த சாகசப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் கீர்த்தி பாண்டியன். இவர், நடிகர் அருண் பாண்டியனின் மகள். கதாநாயகனாக தர்ஷன் நடித்துள்ளார். இசை - அனிருத், விவேக் - மெர்வின், சந்தோஷ் தயாநிதி. நாளை இப்படம் வெளிவரவுள்ளது.
இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகை கீர்த்தி பாண்டியன் பேச்சை ஆரம்பிக்கும் போதே கண்கலங்கினார். பிறகு இயக்குநர் ஹரிஷூக்கு நன்றி சொல்லியபடி தன் பேச்சை ஆரம்பித்தார். அவர் கூறியதாவது:
இந்தப் படத்தின் இயக்குநர் ஹரீஸுக்கு ரொம்ப நன்றி சொல்லவேண்டும். என்னுடைய உடல் தோற்றம் பற்றி எதுவும் சொல்லாத இயக்குநர். கடந்த மூன்றரை வருடங்களாக நான் கதை கேட்டுள்ளேன். நான் சில கதைகளைத் தவிர்த்துள்ளேன். என்னைப் பலர் தவிர்த்த தருணங்களும் உண்டு. பெரிய பெரிய இயக்குநர்கள் கூட தன்னம்பிக்கையை உடைக்கும் அளவுக்குப் பேசியுள்ளார்கள். ஒல்லியாக உள்ளேன், கலர் கம்மியாக உள்ளேன், இப்படி இருந்தால் யாரும் பார்க்கமாட்டார்கள் என்று தொடர்ந்து இப்படிக் கூறியுள்ளார்கள். ஆனால், ஹரிஷ் மட்டுமே நான் எடையை அதிகரிக்க வேண்டும், நான் மாறவேண்டும் என்று ஒரு தருணத்தில் கூட சொல்லவில்லை. ஒரு நடிகையாக என் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார். இதை நான் எப்போதும் மறக்கமாட்டேன். படப்பிடிப்பு முன்பு நான் தன்னம்பிக்கை இல்லாமல் இருந்தேன். இயக்குநர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது - வெளித்தோற்றத்தை வைத்து மட்டுமே நடிகையை நீங்கள் தேர்வு செய்தால் பிறகு திறமை உள்ளவர்களுக்கு வாய்ப்பே கிடைக்காமல் போய்விடும் என்று கண்கலங்கியபடி பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

உலக சாம்பியன் செல்ஸியை 8-2 என வீழ்த்திய பிஎஸ்ஜி..! பாதியிலேயே வெளியேறிய ரசிகர்கள்!

செருப்பில் செல்போன்.. எய்ம்ஸ் தேர்வில் சிக்கிய மாணவர்

கார் பழுதுபார்க்கும் கடையில் தீ! 3 சொகுசு கார்கள் எரிந்து நாசம்! | Salem

போருக்கு இடையே! இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!
வீடியோக்கள்

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

