சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

'90 எம்எல்' அதிகாலை 5 மணி காட்சி: ரசிகர்கள் வெள்ளத்தில் மிதந்த ஓவியா! (விடியோ)

சென்னையிலுள்ள ரோஹிணி மற்றும் ஜிகே சினிமாஸ் ஆகிய திரையரங்குகளில் திரையிடப்பட்ட காலை 5 மணிக் காட்சிகளுக்கு நேரடியாக வருகை தந்த ஓவியாவுக்கு...

News image
Updated On :1 மார்ச் 2019, 6:46 am

எழில்

அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடித்துள்ள படம் 90 எம்.எல். படம் இரட்டை அர்த்த வசனங்களைக் கொண்டுள்ளதால் தணிக்கையில் ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. இசை - சிம்பு. இயக்குநர் அனிதா உதீப், இதற்கு முன்பு குளிர் 100 டிகிரி படத்தை இயக்கியுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் புகழ்பெற்ற பிறகு ஓவியா நடித்து வெளியாகும் படம் மற்றும் இரட்டை அர்த்த வசனங்கள் போன்ற காரணங்களால் இப்படத்துக்கு அதிகக் கவனம் கிடைத்துள்ளது. உலகளவில் இந்தப் படம் 500 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இன்று வெளியான இந்தப் படம், பல திரையரங்குகளில் காலை 5 மணிக் காட்சியுடன் தொடங்கியுள்ளது. சென்னையிலுள்ள ரோஹிணி மற்றும் ஜிகே சினிமாஸ் ஆகிய திரையரங்குகளில் திரையிடப்பட்ட காலை 5 மணிக் காட்சிகளுக்கு நேரடியாக வருகை தந்த ஓவியாவுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தார்கள். அதன் புகைப்படங்கள், விடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.