மஹா படத்துக்காக மீண்டும் ஜோடி சேரும் சிம்பு - ஹன்சிகா!
ஹன்சிகாவின் 50-வது படம் மஹா. அறிமுக இயக்குநர் யு.ஆர். ஜமீல் இயக்கி வருகிறார்...


ஹன்சிகாவின் 50-வது படம் மஹா. அறிமுக இயக்குநர் யு.ஆர். ஜமீல் இயக்கி வருகிறார். கருணாகரன், தம்பி ராமையா போன்றோரும் நடிக்கிறார்கள். இசை - ஜிப்ரான்.
இந்தப் படத்தில் சிம்புவும் நடிப்பதாகத் தகவல் வெளியான நிலையில் அதை உறுதி செய்துள்ளார் ஹன்சிகா. ட்விட்டரில் அவர் கூறியதாவது: ஆமாம்.. ஏற்கெனவே செய்தி வெளியாகிவிட்டதாலும் ஆர்வம் அதிகமாக உள்ளதாலும் இத்தகவலை நானும் சொல்லிவிடுகிறேன்... நானும் எஸ்டிஆரும் மஹா படத்தின் மூலமாக மீண்டும் இணைந்து நடிக்கிறோம் என்று கூறியுள்ளார்.
2015-ல் வெளியான வாலு படத்தில் சிம்புவும் ஹன்சிகாவும் இணைந்து நடித்தார்கள். 2013-ல் இருவரும் காதலிப்பதாக அறிவித்தார்கள். பிறகு கருத்துவேறுபாடு காரணமாகப் பிரிந்துபோனார்கள். இந்நிலையில் மஹா படத்தின் மூலமாக இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...