ஆரஞ்சு மிட்டாய் இயக்குநருடன் மீண்டும் கைகோத்துள்ள விஜய் சேதுபதி!
சென்னை பழனி மார்ஸ் படத்துக்கு வசனம் எழுதியுள்ளார் விஜய் சேதுபதி. இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்து விரைவில் இப்படம் வெளிவரவுள்ளது..


விஜய் சேதுபதி நடித்து தயாரித்து படம் ஆரஞ்சு மிட்டாய். இந்தப் படம் வணிக அளவில் தோல்வியடைந்தாலும் அப்பட இயக்குனர் பிஜூவுடன் மீண்டும் கைகோத்துள்ளார் விஜய் சேதுபதி.
சென்னை பழனி மார்ஸ் என்கிற வித்தியாசமான தலைப்பு கொண்ட படத்தைத் தயாரிக்கிறார் விஜய் சேதுபதி. இப்படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு போன்ற பணிகளையும் செய்துள்ளார் பிஜூ.
பிரவீண் ராஜா, ராஜேஷ் கிரி பிரசாத், வசந்த் மாரிமுத்து, இம்தியாஸ் முகமது, வின் ஹாத்ரி, பாரி இளவழகன் ஆகியோர் புதுமுகங்களாக இப்படத்தில் அறிமுகமாகியுள்ளார்கள். இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார் நிரஞ்சன் பாபு. பாடல்கள் - விக்னேஷ் ஜெயபால்.
சென்னை பழனி மார்ஸ் படத்துக்கு வசனம் எழுதியுள்ளார் விஜய் சேதுபதி. இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்து விரைவில் இப்படம் வெளிவரவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...