ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

சீனாவில் நூறு கோடி ரூபாய் வசூலைத் தாண்டிய எட்டாவது இந்தியப் படம்!

ரவி உத்யவார் இயக்கத்தில் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் உருவான மாம் படம் சமீபத்தில் சீனாவில் வெளியாகி...

News image
Updated On :27 மே 2019, 12:24 pm

எழில்

நடிகை ஸ்ரீதேவியின் 300-வது படம் - மாம். 2017-ம் வருடம் வெளியானது. இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்தார். இந்நிலையில் கடந்த வருடம் பிப்ரவரி மாதம், துபையில் எதிர்பாராதவிதமாக மரணமடைந்தார் ஸ்ரீதேவி. 

ரவி உத்யவார் இயக்கத்தில் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் உருவான மாம் படம் சமீபத்தில் சீனாவில் வெளியாகி, வசூலில் சாதனை செய்துள்ளது. சீனாவில் 15 மில்லியன் டாலர் (ரூ. 100 கோடி) வசூலித்துள்ளது மாம் படம். சீனாவில் ரூ. 100 கோடி வசூலித்துள்ள 8-வது இந்தியப் படம் - மாம். நேற்றுடன் அந்தப் படம் ரூ. 104 கோடி வசூலித்துள்ளது.

சீனாவில் 15 மில்லியன் டாலர் வசூலித்துள்ள இந்தியப் படங்கள்

2015: பிகே 
2017: டங்கல் ( சீனாவில் 100 மில்லியன் டாலர் வசூல்)  
2018: சீக்ரெட் சூப்பர்ஸ்டார் ( சீனாவில் 100 மில்லியன் டாலர் வசூல்)
2018: ஹிந்தி மீடியம்  
2018: பஜ்ரங்கி பைஜான்  
2018: ஹிச்கி 
2019: அந்தாதுன் 
2019: மாம் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.