அர்ஜூன் ரெட்டி என்கிற தெலுங்குப் படம் 2017-ல் வெளியாகி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது. விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் சந்தீப் வங்கா இயக்கிய படத்துக்கு நல்ல விமரிசனங்கள் கிடைத்தது மட்டுமல்லாமல் வசூலிலும் அசத்தியது.
இந்தப் படம் தமிழில் ஆதித்ய வர்மா என்கிற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது. சந்தீப் வங்காவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கிரீசாயா இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். ஏழாம் அறிவு படத்துக்குப் பிறகு ரவி கே. சந்திரன் தமிழில் மீண்டும் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார். கடந்த வருடம் வெளியான ஹிந்திப் படமான அக்டோபர் படத்தில் அறிமுகமாகிக் கவனம் பெற்ற பனிதா சந்து கதாநாயகியாக நடித்துள்ளார். பனிதா, லண்டனில் பிறந்த பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்தவர். ப்ரியா ஆனந்தும் இப்படத்தில் நடித்துள்ளார். இசை - ரதன். இது அவருடைய 4-வது தமிழ்ப்படம். விகடகவி, வாலிபராஜா, டார்லிங் 2 ஆகிய படங்களுக்கு ரதன் இசையமைத்துள்ளார். தயாரிப்பு - ஈ4 எண்டர்டெயிண்ட்மெண்ட்.
ஆதித்ய வர்மா படம், தீபாவளிக்குப் பிறகு இரு வாரங்கள் கழித்து, நவம்பர் 8 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது இதன் வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டுள்ளது.
தணிக்கையில் ஏ சான்றிதழ் பெற்றுள்ள இந்தப் படம் நவம்பர் 21 அன்று வெளியாகவுள்ளது. அதாவது நவம்பர் 15 அன்று விஜய் சேதுபதி நடித்த சங்கத் தமிழன் படமும் விஷால் நடித்த ஆக்ஷன் படமும் வெளியாகவுள்ளன. இதற்குப் பிறகு ஆதித்ய வர்மா படம் வெளியாகவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏலகிரியில் கூடுதலாக அரசு தங்கும் விடுதி: சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை!

காஞ்சனகிரி மலை சுற்றுலாத் தலமாக அறிவிக்கப்படுமா? பொதுமக்கள் எதிா்பாா்ப்பு!!
டாஸ்மாக் மதுபாட்டில்கள் கடத்தியவா் கைது

நாம் தமிழா் கட்சிக் கொடி அவமதிப்பு: கடலூா் எஸ்.பி.யிடம் புகாா்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


