வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் மாநாடு என்கிற படம் உருவாகவுள்ளதாக கடந்த வருடம் அறிவிக்கப்பட்டது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு, 2019 கோடைக்காலத்தில் படம் வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டடது. இந்தப் படத்தில் சிம்புவின் ஜோடியாக, பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் - நடிகை லிசி தம்பதியின் மகளான கல்யாணி பிரியதர்ஷன் ஒப்பந்தமானார். பிறகு இந்த வருடம் ஜூன் 25 முதல் படப்பிடிப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதம் படத்தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: எதையும் உரிய நேரத்தில் திட்டமிட்டுச் செய்கிறவன், அந்தத் தயாரிப்புக்கு நேர்மையோடு இருக்கின்றான் என்று நம்புபவன் நான். ஆனால் எவ்வளவோ இழுத்துப் பிடித்தும் கால விரயம் தான் நிகழ்ந்ததே தவிர, படம் தொடங்க இயலவில்லை. அதனால் சிம்பு ’நடிக்க இருந்த’ மாநாடு படத்தைக் கைவிடுவதைத் தவிர்க்க இயலவில்லை. சிம்புவின் அன்பும் நட்பும் தொடரும். வெங்கட் பிரபு இயக்க, மாநாடு படம் எனது தயாரிப்பில் புதிய பரிமாணத்தோடு தொடங்கும். விரைவில் அந்த அறிவிப்பு வரும் என்றார்.
அடுத்தச் சில நாள்களில், சிம்புவின் புதிய படம் குறித்து டி.ராஜேந்தர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். சிம்பு அடுத்ததாக மகா மாநாடு என்கிற படத்தை இயக்கி நடிக்க உள்ளதாகவும் அந்தப் படத்தின் பட்ஜெட் ரூ. 125 கோடி என்றும் அறிவித்தார். 5 மொழிகளில் உருவாகவுள்ள இந்தப் படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிக்கவுள்ளது என்றும் கூறினார்.
எனினும் திடீர் திருப்பமாக சில வாரங்களுக்கு முன்பு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி - சிம்பு இடையே புதிய ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி, மாநாடு படத்தில் நடிக்க தான் தயாராக இருப்பதாக சிம்பு அறிவித்தார். படப்பிடிப்புக்குச் சரியாக வந்து ஒத்துழைப்பு கொடுப்பதாகவும் அவர் உத்தரவாதம் அளித்ததால் மாநாடு படத்துக்கு மீண்டும் உயிர் வந்தது.
இந்நிலையில் சிம்புவுடனான புகைப்படங்களை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்விட்டரில் வெளியிட்டு, விரைவில் மாநாடு படப்பிடிப்பின் தேதி அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.


தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏலகிரியில் கூடுதலாக அரசு தங்கும் விடுதி: சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை!

காஞ்சனகிரி மலை சுற்றுலாத் தலமாக அறிவிக்கப்படுமா? பொதுமக்கள் எதிா்பாா்ப்பு!!
டாஸ்மாக் மதுபாட்டில்கள் கடத்தியவா் கைது

நாம் தமிழா் கட்சிக் கொடி அவமதிப்பு: கடலூா் எஸ்.பி.யிடம் புகாா்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


