ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

மம்மூட்டி படத்தின் FDFS காட்சியைப் பார்ப்பதற்காகத் தனது திருமணத் தேதியை மாற்றிய ரசிகர்!

இதன்மூலம் நவம்பர் 21 அன்று தனது மனைவியை அழைத்துக்கொண்டு  fdfs காட்சியைப் பார்க்கவுள்ளார். 

News image
Updated On :8 நவம்பர் 2019, 7:46 am

மம்மூட்டி, உன்னி முகுந்தன், சித்திக், கனிகா, அனு சித்தாரா போன்றோ நடிப்பில் எம். பத்மநாபன் இயக்கியுள்ள மலையாளப் படம் - மாமாங்கம். இப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டுள்ளது. 

நவம்பர் 21 அன்று வெளியாகவுள்ள இப்படத்துக்காகத் தனது திருமணத்தைத் தேதியை மாற்றியுள்ளார் கொச்சியைச் சேர்ந்த மம்மூட்டியின் தீவிர ரசிகரான மேமோன்.

வட பரவூரில் நவம்பர் 21 அன்று மேமோனுக்குத் திருமணம் நடைபெறுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் மம்மூட்டியின் தீவி ரசிகரான மேமோன், தனது ஆதர்ச நடிகரின் படமான மாமாங்கம், அதே நவம்பர் 21 அன்று வெளிவருவதை அறிந்த பிறகு தனது திருமணத் தேதியை மாற்றி வைக்க முடிவு செய்தார். தனது திருமணத்தால் மாமாங்கம் படத்தின் fdfs எனப்படும் முதல் காட்சியைப் பார்ப்பது தடைபடக்கூடாது என்பதற்காக இந்த முடிவை எடுத்தார். 

இதையடுத்து கடந்த அக்டோபர் 30 அன்று திருமணம் செய்துகொண்டார் மேமோன். இதன்மூலம் நவம்பர் 21 அன்று தனது மனைவியை அழைத்துக்கொண்டு  fdfs காட்சியைப் பார்க்கவுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.