ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

பாடகி லதா மங்கேஷ்கர் உடல் நிலையில் ஓரளவு முன்னேற்றம்!

பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கருக்கு திங்கள்கிழமை திடீா் மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து...

News image

lata-mangeshkar_d125437

Updated On :14 நவம்பர் 2019, 7:25 am

பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கருக்கு திங்கள்கிழமை திடீா் மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து, மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். 

லதா மங்கேஷ்கா், திங்கள்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டாா்; அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நோய்த்தொற்று காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. 

இந்நிலையில் அவருடைய உடல் நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என மருத்துவமனை வட்டாரங்கள் கூறியுள்ளன. எனினும் தீவிர சிகிச்சைப் பிரிவில் தான் அவருக்குத் தொடர்ச்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. முழுமையாகக் குணமாக இன்னும் சில நாள்களாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

லதா மங்கேஷ்கா் கடந்த செப்டம்பா் 28-ஆம் தேதி தனது 90-ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடினாா். இவா், தனது 70 ஆண்டு கால திரையுலக வாழ்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹிந்தி திரைப்படங்களில் பாடல்களைப் பாடியுள்ளாா். இதுதவிர, தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும், வெளிநாட்டு மொழிகளிலும் பாடியுள்ளாா். இவருக்கு மத்திய அரசு கடந்த 1989-இல் தாதாசாகேப் பால்கே விருது, 2001-ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது ஆகியவற்றை வழங்கி கௌரவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.