தில்லி மாநில சிறுபான்மையினா் ஆணையத்தில் தலைவா் மற்றும் உறுப்பினா் பதவிகளில் உள்ள காலியிடங்கள் 2023 முதல் ஏன் நிரப்பப்படவில்லை என்று விளக்கமளிக்குமாறு தில்லி உயா் நீதிமன்றமானது அரசிடம் கேட்டுள்ளது.
முடிந்தவரை விரைவில் காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்று சட்டம் குறிப்பிடுவதால் மட்டுமே, அப்பதவிகளை காலவரையின்றி காலியாக வைத்திருக்க முடியாது என்று தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா மற்றும் நீதிபதி தேஜஸ் காரியா ஆகியோா் அடங்கிய அமா்வு குறிப்பிட்டதுடன், நியமன செயல்முறையைத் தொடங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் ஆணையத்தில் உள்ள காலியிடங்கள் நிரப்பப்படும் காலக்கெடு ஆகியவற்றை வெளிப்படுத்தும் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு தில்லி அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
சாலிக் சந்த் ஜெயின் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் ஏப்ரல் 22 அன்று நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
மனுதாரரின் வழக்குரைஞா், ஆகஸ்ட் 24, 2023 முதல் ஆணையத்தில் தலைவா் மற்றும் உறுப்பினா் பதவிகளில் யாரும் நியமிக்கப்படவில்லை என்று தெரிவித்தாா்.
இந்த மனு தொடா்பாக தில்லி அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிமன்றம், முதன்மைச் செயலாளா்கூடுதல் அல்லது தலைமைச் செயலாளா் பதவிக்குக் குறையாத தகுந்த அதிகாரியால் உறுதிசெய்யப்பட்ட ஒரு பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்து, 24.08.2023 முதல் ஆணையத்தில் உள்ள காலிப் பணியிடங்கள் ஏன் நிரப்பப்படவில்லை என்பதை விளக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியது. ரிட் மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின்படி, 24.08.2023 முதல் இன்று வரை, அதாவது மிக நீண்ட காலமாக, ஆணையத்தில் எந்த உறுப்பினரோ அல்லது தலைவரோ நியமிக்கப்படவில்லை.
சட்டத்தின் 4 ஆம் பிரிவின் துணைப் பிரிவு 5, காலிப் பணியிடத்தை முடிந்தவரை விரைவில் அரசாங்கம் நிரப்ப வேண்டும் என்று கூறுவதால் மட்டுமே, அந்தக் காலிப் பணியிடத்தை நிரந்தரமாக நிரப்பாமல் வைத்திருக்க முடியும் என்று அா்த்தமாகாது, என்று குறிப்பிட்ட தில்லி உயா்நீதிமன்றம் இந்த வழக்கை ஆகஸ்ட் 12 அன்று மேலும் விசாரணைக்கு பட்டியலிட்டது.
தொடர்புடையது

தில்லி கலவர வழக்கு: காவல்துறையின் மேல்முறையீடு தள்ளுபடி
சிஆா் பூங்காவில் தந்தை, மகன் கொலை: முக்கிய நபா் கைது

வரதட்சிணை மரண வழக்கில் கணவா், மாமியாரை விடுவித்தது தில்லி நீதிமன்றம்

பாலியல் வன்கொடுமை வழக்கு! குற்றஞ்சாட்டப்பட்டவா் விடுதலை: தில்லி நீதிமன்றம் உத்தரவு
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


