பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகத்தில் கலந்துகொண்ட பிறகு ஹரிஷ் கல்யாணுக்குத் தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக நடிக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் கிடைத்து வருகின்றன. கடந்த வருடம் இவர் நடித்த பியார் பிரேமா காதல் படம் வெற்றி பெற்றதால் மேலும் கூடுதல் கவனம் பெற்றார். அதன்பிறகு இந்த வருடம் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் வெளியானது. அடுத்ததாக தனுசு ராசி நேயர்களே வெளியாகவுள்ளது. இதற்கடுத்து, இயக்குநர்கள் சசி, சிம்புதேவன் படங்களில் ஹரிஷ் கல்யாண் நடிக்கவுள்ளார்.
ஹரிஷ் கல்யாண், ரெபா மோனிகா ஜான், டிகன்கானா சூர்யவன்ஷி, யோகி பாபு நடிப்பில் சஞ்சய் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - தனுசு ராசி நேயர்களே. நடிகரும் இயக்குநருமான சந்தான பாரதியின் மகனான சஞ்சய் பாரதி இயக்கும் முதல் படம் இது. ஜிப்ரான் இசையமைத்துள்ள தனுசு ராசி நேயர்களே படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கொல்கத்தாவில் பிரதமர் மோடி சாலை வலம்!

வெள்ளிச்சுடரே பாடல்!

அதிக ரன்கள் குவித்து சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

அழகு ஓவியம் தேஜு அஸ்வினி - புகைப்படங்கள்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


