இந்தியா - வங்கதேசம் ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் கொல்கத்தாவில் நாளை நடைபெறவுள்ளது. இந்த ஆட்டம் இந்தியா எதிா்கொள்ளவிருக்கும் முதல் பகலிரவு டெஸ்ட் ஆட்டமாகும். இளஞ்சிவப்பு (பிங்க்) நிற பந்து இந்த ஆட்டத்தில் பயன்படுத்தப்படவுள்ளது.
இந்நிலையில் பகலிரவு டெஸ்ட் நடைபெறவுள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில், தான் நடித்த மர்தானி 2 படத்தை விளம்பரப்படுத்தவுள்ளார் நடிகை ராணி முகர்ஜி. கோபி புத்ரன் இயக்கியுள்ள மர்தானி 2 படம் டிசம்பர் 13 அன்று வெளியாகவுள்ளது. இப்படத்தில் காவல்துறை அதிகாரி வேடத்தில் ராணி முகர்ஜி நடித்துள்ளார்.
ஈடன் கார்டன்ஸ் மைதானத்துக்கு செல்வது குறித்து ராணி முகர்ஜி கூறியதாவது:
ஈடன் கார்டன்ஸில் முதல்முறையாக கிரிக்கெட் ஆட்டத்தைப் பார்க்கவுள்ளேன். அந்த மைதானத்தில் கிரிக்கெட் ஆட்டத்தைப் பார்க்கும் அனுபவம் அற்புதமாக இருக்கும் என என் பெற்றோர் சொல்லியிருக்கிறார்கள். எனவே எனக்குப் புது அனுபவம் கிடைக்கப் போகிறது. அங்குள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கும் ஆட்டத்தைத் தொலைக்காட்சியில் பார்க்கும் பல லட்சம் ரசிகர்களுக்கும் மர்தானி 2 படம் குறித்து பேசவுள்ளேன் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சாய் சுதர்சன் அரைசதம் விளாசல்; குஜராத் டைட்டன்ஸுக்கு 4-வது வெற்றி!

பயங்கரவாதிகளுக்கு பிரியாணி கொடுக்கிறது காங்கிரஸ், திரிணமூல் : அமித் ஷா
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக லக்னௌ பந்துவீச்சு!

ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் 4வது காலாண்டு லாபம் 5% உயர்வு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


