‘தலைவி’ படத்தின் முதல் தோற்ற போஸ்டர், விடியோ வெளியீடு!

இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டரும் அதன் விடியோவும் வெளியாகியுள்ளது.
‘தலைவி’ படத்தின் முதல் தோற்ற போஸ்டர், விடியோ வெளியீடு!
Updated on
1 min read

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சுயசரிதைத் திரைப்படத்தில் அவருடைய கதாபாத்திரத்தில்  பாலிவுட்  நாயகி கங்கனா ரனாவத் நடிக்கிறார். ஜெயலலிதா, கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அவரது வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் தமிழ், ஹிந்தி மொழிகளில் இத்திரைப்படம் தயாராகிறது. 

புரட்சித்தலைவி என ஜெயலலிதா அழைக்கப்பட்டதால், தமிழில் தலைவி என்றும், ஹிந்தியில் ஜெயா என்ற பெயரிலும் இத்திரைப்படம் தயாராகிறது. இப்படத்தை மதராசப்பட்டினம், தலைவா, தெய்வத் திருமகள் உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குநர் விஜய், இருமொழிகளிலும் இயக்குகிறார். இத்திரைப்படத்தின் கதையை பாகுபலி, மணிகர்னிகா திரைப்படங்களின் கதாசிரியரும், இயக்குநர் ராஜமெளலியின் தந்தையுமான கே.வி.விஜயேந்திர பிரசாத் எழுதுகிறார். விஷ்ணுவர்தன் இந்தூரி, சைலேஷ் ஆர்.சிங் ஆகியோர் தயாரிக்கின்றனர். இசை - ஜி.வி. பிரகாஷ். 

இந்நிலையில் இந்தப் படம் அடுத்த வருடம் ஜூன் 26 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டரும் அதன் விடியோவும் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com