இரு படங்களை மட்டுமே இயக்கியுள்ள சசிகுமார் அதன்பிறகு தொடர்ச்சியாகப் பல படங்களில் கதாநாயகனாக நடித்துவருகிறார். இந்த வருடம் அவர் நடிப்பில் பேட்ட, கென்னடி கிளப், அடுத்த சாட்டை, எனை நோக்கி பாயும் தோட்டா என நான்குப் படங்கள் வெளிவந்துவிட்டன.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீம ராஜா என வரிசையாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களை மட்டுமே இயக்கி வந்த இயக்குநர் பொன்ராமின் அடுத்தப் படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார். எம்ஜிஆர் மகன் என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு, கடந்த செப்டம்பர் மாதம் பூஜையுடன் தொடங்கியது. சூப்பர் டீலக்ஸ் படம் மூலமாக அறிமுகமாகியுள்ள டப்ஸ்மேஷ் புகழ் மிருணாளினி ரவி, இப்படத்தில் சசிகுமாரின் ஜோடியாக நடிக்கிறார். சத்யராஜ், சமுத்திரக்கனி, சரண்யா போன்றோரும் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.
இந்நிலையில் எம்ஜிஆர் மகன் படம் பொங்கல் சமயத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பொங்கலுக்கு வெளியாகவுள்ள ரஜினியின் தர்பார், பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களுடன் எம்ஜிஆர் மகன் போட்டியிடுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இல்வாழ்வு வேண்டாம்

தற்கொலைக்கு முயன்ற முதியவர்! காப்பாற்றிய தண்டவாள பராமரிப்பாளர்!

ரியான் பராக்கின் பேட்டிங்கில் தவறில்லை, வலுவாக மீண்டு வருவார்: விக்ரம் ரத்தோர்

சிவகார்த்திகேயன் படத்தில் திலீப்?
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


