பிக் பாஸ் கொண்டாட்டம்: கவினை கௌரவித்த சாண்டி; தர்ஷனை விட்டுக்கொடுக்காத முகேன்!

நேற்றைய பிக் பாஸ் கொண்டாட்டத்தில், போட்டியாளர்கள் என்பதைத் தாண்டி சிறந்த நண்பர்கள் என்பதை நிரூபித்து விட்டார்கள் சாண்டி- கவின் மற்றும் முகேன்- தர்ஷன்
Kavin Sandy in Biggboss
Kavin Sandy in Biggboss
Updated on
3 min read

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு சீசனில் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் 'FAB5' குரூப்பின் நட்பு மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. நேற்றைய பிக் பாஸ் கொண்டாட்டத்தில், போட்டியாளர்கள் என்பதைத் தாண்டி சிறந்த நண்பர்கள் என்பதை நிரூபித்து விட்டார்கள் சாண்டி- கவின் மற்றும் முகேன்- தர்ஷன்

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன்-3 நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி தொடங்கிய நிலையில், 105 நாட்களுடன் நேற்று நிறைவுற்றது. 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்தப் போட்டியில், 100 நாட்களைக் கடந்து கடைசி வாரத்தில் பிக் பாஸ் வீட்டில் முகேன், லாஸ்லியா, சாண்டி, ஷெரின் ஆகிய 4 பேர் இறுதிப் போட்டியாளர்களாக தேர்வாகினர்.  நடிகர் கமல் ஹாசன் மூன்றாவது முறையாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

நேற்று மாலை 6 மணிக்கு விஜய் டிவியில் டைட்டில் வின்னரை அறிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதிப் போட்டியாளர்களாக இருந்த நால்வரில் இருவர் வெளியேற்றப்பட வேண்டும் என்ற நிலையில், முதலில் ஷெரின் வெளியேற்றப்பட்டார். 

பின்னர் மூன்றாம் இடத்துடன் லாஸ்லியா வெளியேற்றப்பட்டார். இறுதியாக  பிக் பாஸ் டைட்டில் வின்னர் பட்டத்தை முகேன் பெற்றுள்ளார்.  முகேனைத் தொடர்ந்து, 'ரன்னர் அப்'(இரண்டாம்) பட்டத்தை டான்ஸ் மாஸ்டர் சாண்டி பெற்றார். 

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த 16 பேரில் ஒரு சிலர் மற்றவருக்கு முன்பே அறிமுகம் ஆகியிருந்தாலும் கவின்- சாண்டி நட்பு தொடக்கம் முதலே சிறப்பாக இருந்தது. கவின்- சாண்டியுடன் சரவணனும் சேர மூவர் நட்பாக உருவானது. கவின் - சாண்டி நட்பைப் பார்த்து பொறாமைப்படுவதாக சக போட்டியாளரான அபிராமி தெரிவித்திருந்தார். பின்னர் சரவணன் வெளியேற, இருவர் நட்பு 'ஐவர்' நட்பானது. 

கடைசி சில வாரங்களில் இடங்களில் கவின், சாண்டி, முகேன், தர்ஷன், லாஸ்லியா என்ற 'FAB5' குரூப் பிரபலமானது. இவர்கள் இணைந்து உருவாக்கிய 'we are the boys uh' பாடலும் பிரபலமானது.

டாஸ்க்கின் இடையில் கூட பல நேரங்களில் இவர்களின் நட்பு பிரதிபலித்ததை யாராலும் மறுக்க முடியாது. 

அதிலும், கவின் ரூ. 5 லட்சத்தைபே பெற்றுக்கொண்டு வெளியேறிய பிறகு 'நட்பின் நாயகன் கவின்' என்று அவரது ரசிகர்கள் கொண்டாடினர். அதற்கு காரணம் கவின் வெளியேறும்போது, 'நண்பர்களாக பழகி விட்டோம். இனி அவர்களை போட்டியாளர்காளாக பார்த்து என்னால் விளையாட முடியாது' என்று கூறிவிட்டு வெளியேறினார். நண்பர்களுக்காக விட்டுக்கொடுத்ததாகவே அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ட்வீட் செய்தனர். 

இந்த நட்பு நேற்றைய பிக் பாஸ் கொண்டாட்டத்திலும் பிரதிபலித்தது. முகேன் மற்றும் சாண்டி மேடையில் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இதன்பின்னர் சாண்டி, உடனே கவினை மேடைக்கு அழைத்து, தனது விருதை, கமல் ஹாசனிடம் கொடுத்து கவினுக்கு அணிவிக்கச் சொன்னார். இந்தப் போட்டியில் கவினும் வெற்றியாளர் தான் என்றும் தன்னுடைய வெற்றியில் கவினுக்கும் பங்கு இருக்கிறது என்று கூறினார். உண்மையில் கவின் மற்றும் சாண்டி ரசிகர்களுக்கு அளப்பரிய மகிழ்ச்சியை அளித்திருக்கும். 

அதேபோன்று, முகேனும், தர்ஷனை மேடைக்கு அழைத்து சிறப்பித்தார். மற்ற இரண்டு சீசன்களிலும் இல்லாத அளவுக்கு தனது விருதை பகிர்ந்த சாண்டியையும், நண்பனை கௌரவித்த முகேனையும் நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com