பிக் பாஸ்: கமல் ஹாசனிடம் சிறப்பு விருது பெற்ற தர்ஷன்! கண்ணீர் விட்ட தர்ஷனின் தாயார்..

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன்-3 நிகழ்ச்சி கடந்த ஜூன் 23ம் தேதி தொடங்கி, 105 நாட்களுடன் நேற்றுடன் முடிவடைந்தது.
பிக் பாஸ்: கமல் ஹாசனிடம் சிறப்பு விருது பெற்ற தர்ஷன்! கண்ணீர் விட்ட தர்ஷனின் தாயார்..

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன்-3 நிகழ்ச்சி கடந்த ஜூன் 23ம் தேதி தொடங்கி, 105 நாட்களுடன் நேற்றுடன் முடிவடைந்தது. 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்தப் போட்டியில், 100 நாட்களைக் கடந்து பிக் பாஸ் வீட்டில் முகேன், லாஸ்லியா, சாண்டி, ஷெரின் ஆகிய 4 பேர் இறுதிப் போட்டியாளர்களாக தேர்வாகினர்.  நடிகர் கமல் ஹாசன் மூன்றாவது முறையாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார்.

நேற்று மாலை 6 மணிக்கு விஜய் டிவியில் டைட்டில் வின்னரை அறிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதிப் போட்டியாளர்களாக இருந்த நால்வரில் ஒருவர் வெளியேற்றப்பட வேண்டும் என்ற நிலையில், ஷெரின் வெளியேற்றப்பட்டார். 

இறுதியாக  பிக் பாஸ் டைட்டில் வின்னர் பட்டத்தை முகேன் பெற்றுள்ளார்.  முகேனைத் தொடர்ந்து, இரண்டாம்(ரன்னர்) இடத்தை டான்ஸ் மாஸ்டர் சாண்டியும், அதைத்தொடர்ந்து மூன்றாம் இடத்தை முறையே லாஸ்லியா பெற்றுள்ளனர்.

இதற்கிடையே, போட்டியாளர்களில் ஒரு சிலருக்கு முக்கிய விருதுகள் வழங்கப்பட்டது. அதன்படி, முக்கியப் போட்டியாளராக இருந்த தர்ஷனுக்கு 'ஆல் ரவுண்டர்'(All rounder) விருது வழங்கப்பட்டது. 

அனைத்து டாஸ்க்குகளிலும் சிறப்பாக பங்கேற்ற தர்ஷன் தான் இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக இருப்பார் என்று தொடக்கம் முதல் பிக்பாஸ் போட்டியாளர்களாலேயே பேசப்பட்டு வந்தது. கடந்த வாரம் கடைசி எலிமினேஷனில் தர்ஷன் வெளியேற்றப்பட்டது பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், பிக் பாஸ் சீசன் - 3யின் உண்மையான டைட்டில் வின்னர் தர்ஷன் தான் என்று ட்விட்டரில் ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகின.

இந்த நிலையில், நேற்றைய பிக் பாஸ் கொண்டாட்டத்தில் தர்ஷனுக்கு சிறந்த ஆல்ரவுண்டருக்கான விருது வழங்கப்பட்டது. மேலும், அவருக்கு இன்ப அதிர்ச்சியாக கமல்ஹாசன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.  கமலின் 'ராஜ் கமல் பிலிம்ஸ்' நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க தர்ஷனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. 

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய தர்ஷனின் தாயார், 'தர்ஷன் பிக் பாஸ் டைட்டில் வின்னர் பட்டம் பெறவில்லை என்பது  கவலையில்லை. தமிழக மக்களின் மனதில் இடம்பிடித்துள்ளதே அவனது வெற்றி தான்' என்று கண்ணீருடன் கூறினார். தர்ஷன் வெற்றியாளராக பார்க்க வேண்டிய ரசிகர்களுக்கு இந்த நிகழ்வு நெகிழ்ச்சியானதாக இருந்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com