இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் அண்மையில் வெளியான அசுரன் படத்தில் அனைவரின் நடிப்பும் பெரிதும் பாராட்டப்பட்டது, என்றாலும் மலையாள நடிகை மஞ்சு வாரியரின் கதாபாத்திரம் பெரும் கவனத்துக்கு உட்பட்டு ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை உண்டாக்கியது.

தனுஷ் மனைவியாக பச்சையம்மாள் எனும் கதாபாத்திரத்துக்கு உயிர் வடிவம் தந்து காத்திரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் மஞ்சு வாரியர். அண்மையில் படத்தைப் பார்த்து ரசித்த கமல்ஹாசன், மஞ்சு வாரியரின் நடிப்பைப் பாராட்டியுள்ளார்.

கமலை சந்தித்த புகைப்படங்களைப் பகிர்ந்த மஞ்சு வாரியர் தனது சமூக ஊடக பக்கத்தில், “#ASURAN-ஐப் பார்த்தமைக்கும், நீங்கள் அதை எவ்வளவு நேசித்தீர்கள் என்பதை எங்களுக்குத் தெரிவித்ததற்கும் நன்றி’ என்று பதிவிட்டுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அசுரனை ஒரு தனியார் திரையிடலில் பார்த்ததாகவும், பின்னர் மஞ்சு வாரியரை சந்தித்ததாகவும், அவரை தனிப்பட்ட முறையில் வாழ்த்துவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தில் வெற்றிமாறன் மற்றும் தனுஷ் இருவரையும் ரஜினிகாந்த் அழைத்து பாராட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இஸ்லாமியா்களுக்கு 7% இட ஒதுக்கீடு வழங்க தவ்ஹீத் ஜமாத் தீா்மானம்
ஜாா்க்கண்ட் கலால் காவல் துறை தோ்வின் வினாத்தாள் கசிவு: 159 தோ்வா்கள் கைது

பைக் மீது பேருந்து மோதி பெண் உயிரிழப்பு

கும்பகோணத்தை முன்மாதிரி நகரமாக்குவோம்! - ஜி.கே. வாசன் பேச்சு
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


