இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

தீபாவளிக்குப் பிறகு வெளியாகும் துருவ் விக்ரம் நடித்த ஆதித்ய வர்மா: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ஆதித்ய வர்மா படம், தீபாவளிக்குப் பிறகு இரு வாரங்கள் கழித்து, நவம்பர் 8 அன்று வெளியாகவுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது...

News image
Updated On :2 செப்டம்பர் 2019, 5:43 am

எழில்

அர்ஜூன் ரெட்டி என்கிற தெலுங்குப் படம் 2017-ல் வெளியாகி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது. விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் சந்தீப் வங்கா இயக்கிய படத்துக்கு நல்ல விமரிசனங்கள் கிடைத்தது மட்டுமல்லாமல் வசூலிலும் அசத்தியது. 

இந்தப் படம் தமிழில் ஆதித்ய வர்மா என்கிற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது. சந்தீப் வங்காவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கிரீசாயா இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். ஏழாம் அறிவு படத்துக்குப் பிறகு ரவி கே. சந்திரன் தமிழில் மீண்டும் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார். கடந்த வருடம் வெளியான ஹிந்திப் படமான அக்டோபர் படத்தில் அறிமுகமாகிக் கவனம் பெற்ற பனிதா சந்து கதாநாயகியாக நடித்துள்ளார். பனிதா, லண்டனில் பிறந்த பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்தவர். ப்ரியா ஆனந்தும் இப்படத்தில் நடித்துள்ளார். இசை - ரதன். இது அவருடைய 4-வது தமிழ்ப்படம். விகடகவி, வாலிபராஜா, டார்லிங் 2 ஆகிய படங்களுக்கு ரதன் இசையமைத்துள்ளார். தயாரிப்பு - ஈ4 எண்டர்டெயிண்ட்மெண்ட்.

இந்நிலையில் ஆதித்ய வர்மா படம், தீபாவளிக்குப் பிறகு இரு வாரங்கள் கழித்து, நவம்பர் 8 அன்று வெளியாகவுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.