கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

மிஷ்கினின் துப்பறிவாளன் 2 படத்துக்கு இசையமைக்கிறார் இளையராஜா!

முதல்முறையாக மிஷ்கின் இயக்கும் அடுத்தடுத்தப் படங்களுக்கு அவர் இசையமைக்கிறார்...

News image
Updated On :11 செப்டம்பர் 2019, 8:29 am

எழில்

2017-ல் விஷால் நடிப்பில் துப்பறிவாளன் படத்தை இயக்கினார் மிஷ்கின். அரோல் கரோலி இசையமைத்த அப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்ததாக உருவாகிறது.  மிஷ்கின் இயக்கத்தில் உருவாகவுள்ள துப்பறிவாளன் 2 படத்துக்கு இளையராஜா இசையமைக்கவுள்ளார். இத்தகவலை விஷால் அறிவித்துள்ளார். திரையுலகில் 15-ம் ஆண்டில் அடியெடுத்தும் வைக்கும் நான், முதல்முறையாக இளையராஜா சார் இசையமைப்பில் நடிக்கிறேன்  என்று கூறியுள்ளார் விஷால். 

2013-ல் மிஷ்கின் இயக்கிய ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். அதற்கு முன்பு மிஷ்கின் இயக்கிய நந்தலாலாவுக்கும் தற்போது இயக்கி வரும் சைக்கோ படத்துக்கும் இளையராஜா தான் இசை. உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் அப்படத்துக்கு ஒளிப்பதிவு -  தன்வீர் மிர். 

துப்பறிவாளன் 2 படத்துக்கும் இளையராஜா இசையமைப்பதின் மூலம் முதல்முறையாக மிஷ்கின் இயக்கும் அடுத்தடுத்தப் படங்களுக்கு அவர் இசையமைக்கிறார்.

Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.