மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

விவசாயிகளுக்குக் குரல் கொடுத்த காப்பான் படம்: கே.வி. ஆனந்த், சூர்யாவுக்கு விவசாயிகள் சங்கம் பாராட்டு!

காப்பான் படத்தில் விவசாயிகளுக்குக் குரல் கொடுக்கும் விதத்தில் காட்சிகள் அமைந்ததற்கும், விவசாயிகளுக்குக் குரல் கொடுத்ததற்காகவும்...

News image
Updated On :27 செப்டம்பர் 2019, 5:47 am

காப்பான் படத்தில் விவசாயிகளுக்குக் குரல் கொடுக்கும் விதத்தில் காட்சிகள் அமைந்ததற்கும், விவசாயிகளுக்குக் குரல் கொடுத்ததற்காகவும் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சூர்யாவுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளது.

தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் காப்பான் படம் பார்த்துவிட்டு செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்திய விவசாய உற்பத்தியில் மண்ணை மலடாக்கும் உரம், பூச்சிக் கொள்ளி மருந்துகள் பயன்பாட்டை கைவிட்டு இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் வகையில் மண்புழு வளர்ப்பு, இயற்கை உரம் தயார் செய்வது மற்றும் பயன்படுத்துவதின் அவசியத்தை காப்பான் படம் உணர்த்துகிறது. இந்திய விவசாயிகளின் பெருமையையும், உணவு உற்பத்தியின் தேவையையும் வெளிப்படுத்தும் உயரிய லட்சியத்துடன் இப்படம் வெளிவந்துள்ளது. காவிரி டெல்டாவைக் காக்க வந்த திரைப்படம், காப்பான். விவசாயிகளின் ஒற்றுமையையும் போர் குணத்தையும் ஊக்கப்படுத்தும் காப்பான் திரைப்படத்தை ஒவ்வொரு தமிழனும் கண்டுகளிக்க வேண்டும். அர்ப்பணிப்பு உணர்வுமிக்க திரைப்படத்தின் கதாநாயகன் சூர்யா உள்ளிட்ட படக்குழுவினரை மனதார வாழ்த்துகிறோம், பாராட்டுகிறோம் என்று கூறினார்.  

இந்நிலையில் காப்பான் படக் கதாநாயகன் சூர்யா, இயக்குநர் கே.வி. ஆனந்த் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்தினார் பி.ஆர். பாண்டியன். விவசாயிகளுக்காகக் குரல் கொடுத்ததற்காக சூர்யா உள்ளிட்ட படக்குழுவினருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.