மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று பரப்புரை செய்யத் தயாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி! புதுவையில் மகளிருக்கு இலவசப் பேருந்து, வேலைவாய்ப்பு, மருத்துவக் காப்பீடு! - ராகுல் அறிவிப்பு மாநிலங்களவை எம்பிக்களாக சுதீஷ், அன்புமணி உள்ளிட்டோர் பதவியேற்பு! ராணிப்பேட்டையில் போட்டியிடவில்லை: வினோத் காந்தி! சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை சென்னையில் இன்று விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஹெலிகாப்டர் அருகே ட்ரோன்: 3 பேர் கைது தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ராஜிநாமா
/

விஜய் படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி: அதிகாரபூர்வ அறிவிப்பு!

தளபதி 64 என்று தற்போதைக்குக் குறிப்பிடப்படும் இந்தப் படத்துக்கு இசை - அனிருத்.

News image
Updated On :30 செப்டம்பர் 2019, 12:26 pm

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் - பிகில். இந்தப் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. 

தளபதி 64 என்று தற்போதைக்குக் குறிப்பிடப்படும் இந்தப் படத்துக்கு இசை - அனிருத். இந்தப் படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விஜய்யின் 64-வது படத்தில் விஜய் சேதுபதியும் நடிக்கிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. விஜய் - விஜய் சேதுபதி என இரு பெரும் நடிகர்கள் நடிக்கும் படம் என்பதால் தளபதி 64 படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்துள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.