சூர்யா தயாரிப்பில் நடிக்கும் ரம்யா பாண்டியன்


மேக்கப் போட்டு நடித்த மூன்று முழு நீளத் திரைப்படங்கள் கொண்டு வந்து சேர்க்காத புகழை, பிரபலத்தை சமூகவலைத்தளங்களில் வெளியான மேக்கப் கொஞ்சம் கூட இல்லாமல் பிரமாண்ட செட் இல்லாமல், விலையுயர்ந்த டிசைனர் உடைகள் இல்லாமல், சாதாரண சேலை உடுத்தி மொட்டை மாடியில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் ரம்யா பாண்டியனுக்குக் கொண்டு சேர்த்தன. ரம்யா பாண்டியன், தாமிரவருணி தவழும் திருநெல்வேலிப் பெண். அண்ணா பல்கலைக்கழகத்தில் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்.
ஜோக்கர் படம் மூலமாக அறிமுகமான ரம்யா பாண்டியனுக்குத் தற்போது பெரிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
ரசிகர்களுடனான உரையாடலில் இத்தகவலை அவர் வெளியிட்டுள்ளார். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் மற்றும் சிவி குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் நடிக்கவுள்ளதாக ரம்யா பாண்டியன் தகவல் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...