வீட்டுக்குள்ளேயே ஓடி ஓடிப் பயிற்சியெடுக்கும் சிம்பு: மாநாடு படப் பயிற்சியாளர் குஷி! (விடியோ)
ஊரடங்கு உத்தரவினால் வெளியே எங்கும் செல்ல முடியாத நிலையில் வீட்டுக்குள்ளேயே உடற்பயிற்சி செய்து வருகிறார் சிம்பு


வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் மாநாடு படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஏ. சந்திரசேகர், பிரேம்ஜி, கருணாகரன் போன்றோர் நடிக்கிறார்கள். இசை - யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவு - ரிச்சர்ட் எம். நாதன். இப்படத்தில் முதல்முறையாக இஸ்லாமிய இளைஞராக, அப்துல் காலிக் என்கிற வேடத்தில் நடிக்கிறார் சிம்பு. எஸ்.ஜே. சூர்யா, பாரதிராஜாவின் மகன் மனோஜ், பிக் பாஸ் டேனியல், ஒய்.ஜி. மகேந்திரன் ஆகியோர் மாநாடு படத்தில் நடிப்பதாகச் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. தயாரிப்பு - சுரேஷ் காமாட்சி. பிப்ரவரி மாதம் இப்படத்துக்கு பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கியது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஊரடங்கு உத்தரவினால் வெளியே எங்கும் செல்ல முடியாத நிலையில் வீட்டுக்குள்ளேயே உடற்பயிற்சி செய்து வருகிறார் சிம்பு. வீட்டைச் சுற்றியும் பிறகு வீட்டுக்குள்ளேயும் சிம்பு ஓடிப் பயிற்சி எடுக்கும் விடியோவைத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். எதற்காகவும் சிம்பு தனது பயிற்சிகளை நிறுத்தப் போவதில்லை. வீட்டினுள்ளேயே பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார் என மகிழ்ச்சியுடன் இந்த விடியோவைப் பகிர்ந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...